போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் மீண்டும் ஒரு கன்னட நடிகையான சஞ்சனா கல்ராணி கைது செய்யப்பட்டுள்ளார்.
கன்னட திரைப்பட தயாரிப்பாளரும், பத்திரிக்கையாளருமான இந்திரஜித் லங்கேஷ் பெங்களூர் மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில் கன்னட திரையுலகில் உள்ள 15 நடிகை மற்றும் நடிகர்களுக்கு போதை பொருள் விற்பனை செய்யும் கும்பலுடன் தொடர்பு இருப்பதாகவும், சிலர் போதை பழக்கம் உடையவர்கள் என்றும் குற்றம்சாட்டினார். அதனையடுத்து அவரிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணையை தொடர்ந்து ராகினி திவேத் மற்றும் சஞ்சனா கல்ராணிக்கு நேரில் ஆஜராக கோரி நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால் அவர்கள் இருவரும் ஆஜராகாத நிலையில் கடந்த வாரம் பெங்களூர் எலகங்காவில் உள்ள வீட்டில் வைத்து ராகினி திவேத்தை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
இதனை தொடர்ந்து தற்போது பிரபல நடிகையான நிக்கி கல்ராணியின் சகோதரியும், கன்னட த
நடிகையுமான சஞ்சனா கல்ராணியின் வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அதனையடுத்து பெங்களூர் இந்திரநகரில் உள்ள அவரது வீட்டிலிருந்து சஞ்சனா கல்ராணியை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து விசாரணைக்கு அழைத்து சென்றுள்ளனர். இதுவரை போதை பொருள் கடத்தல் விவகாரத்தில் ராகினி திவேத் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், கடந்த சனிக்கிழமை இந்த ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்…
மும்பை : இங்கிலாந்துக்கு எதிரான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் 4 வெற்றிகளுடன் இந்திய அணி தொடரை கைப்பற்றியது.…
சென்னை : சிம்புவின்48-வது திரைப்படத்தினை இயக்குநர் தேசிங் பெரியசாமி இயக்கவுள்ளதாகவும் அந்த படத்தினை கமல்ஹாசன் தன்னுடைய சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல்…
மும்பை : இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் இந்திய அணி 150 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று,…
டெல்லி : இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகத்தின் (ISRO) 100வது ராக்கெட் பணி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. இஸ்ரோ சமீபத்தில்…
அமெரிக்கா : கிராமி விருதுகள் இசை உலகில் மிகவும் மதிப்புமிக்க விருது விழாக்களில் ஒன்றாகும். இந்த கிராமி விருது நிகழ்ச்சி…