போதை பொருள் தடுப்பு போலீசார் ரியா வீட்டில் பரிசோதனை செய்துள்ளனர்.
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் கடந்த ஜூன் 14 ம் தேதி மும்பை பாந்திராவில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக மும்பை போலீசார் சுஷாந்த் சிங் காதலியும், நடிகையுமான ரியா சக்ரபோர்த்தி உள்பட பலரிடம் விசாரணை செய்து வாக்குமூலம் பதிவு செய்தனர்.
இதற்கிடையில், தன் மகன் மரணத்தில் அவரது காதலியும் நடிகையுமான ரியா சக்கரவர்த்திக்கு தொடர்பு உள்ளதாக சுஷாந்த் சிங்கின் தந்தை கிஷோர் சிங் கொடுத்த புகாரின் அடிப்படையில், பாட்னா போலீசாரும் விசாரணை மேற்கொண்டது. சுஷாந்த் வழக்கை சி.பி.ஐ விசாரிக்க பீகார் அரசு பரிந்துரை செய்தது.
இதையடுத்து, பீகார் அரசு பரிந்துரையை மத்திய அரசு ஏற்று கொண்டது. இதனால், சி.பி.ஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது. சமீபத்தில் நடிகை ரியா சக்ரபோர்த்தியின் மொபைல் தொலைபேசியிலிருந்து அனுப்பப்பட்ட வாட்ஸ்அப் உரையாடல்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்பொழுது அவர் போதைப்பொருட்கள் உபயோகித்து தெரிய வந்துள்ளது.
இதனால், ரியா சக்ரபோர்த்தி, அவரது சகோதரர் சோவிக் சக்ரபோர்த்தி உட்பட சிலர் மீது போதை பொருள் கட்டுப்பாட்டு துறை வழக்கு பதிவு செய்துள்ளது. இந்நிலையில், போதை பொருள் தடுப்பு போலீசார் ரியா வீட்டில் பரிசோதனை செய்துள்ளனர்.
சென்னை : டாஸ்மாக் டெண்டர்களில் சுமார் ரூ.1000 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறப்பட்ட நிலையில் அதற்கு பொறுப்பேற்று அமைச்சர் செந்தில்…
சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வார தொடக்க நாளான இன்று (மார்ச் 17) சவரனுக்கு ரூ.80 குறைந்துள்ளது.…
சென்னை : அண்மையில் அமலாக்கத்துறையினர் சென்னை டாஸ்மாக் தலைமை அலுவலகம், மதுபான ஆலைகள் என பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர்.…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் இன்று பட்ஜெட் மீதான விவாதம் மற்றும் கேள்வி பதிலுக்காக கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
சென்னை : சில தினங்களுக்கு முன்னர் அமலாக்கத்துறையினர் சென்னை டாஸ்மாக் தலைமை அலுவலகம், மதுபான ஆலைகள் என பல்வேறு இடங்களில்…
விழுப்புரம் : விழுப்புரத்தில் நடைபெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் அங்கீகார வெற்றி விழாவில் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன்…