நடிகர் சுஷாந்த் மரணம் தொடர்பான விசாரணையின் போது பாலிவுட் திரையுலகில் பலர் போதைப்பொருள் பயன்படுத்தப்படுவதாக தகவல் வெளியானது. இதைதொடர்ந்து, சுஷாந்த் சிங் காதலி ரியா சக்ரபோர்த்தி மற்றும் அவரது சகோதரர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், பாலிவுட் பிரபலங்கள் பலருக்கு போதைபொருள்கள் விற்பனை செய்பவர்களுடன் தொடர்பில் இருக்கிறார்கள் என கூறப்பட்ட நிலையில், நடிகை தீபிகா படுகோன், சாரா அலிகான், ரகுல் ப்ரீத் சிங், ஷ்ரத்தா கபூர் ஆகியோருக்கு போதைப் பொருள் தடுப்பு அமைப்பு சம்மன் அனுப்பப்பட்டது.
அதில், இன்று படுகோனுக்கும், ரகுல் ப்ரீத் சிங்க்கும் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டது. இந்நிலையில், மும்பையில் உள்ள போதைப்பொருள் தடுப்புப்பிரிவு அலுவலகத்தில் நடிகை ரகுல் ப்ரீத் சிங் ஆஜர் ஆனார். மேலும், நடிகர் தீபிகா படுகோனின் மேலாளரான கரிஷ்மா பிரகாஷ் ஆஜர் ஆனார்.
நாளை ஷ்ரத்தா கபூர் மற்றும் சாரா அலி கான் ஆகியோர் ஆஜராக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சத்தீஸ்கர் : நடந்து முடிந்த சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் டி20 கிரிக்கெட் தொடர், ஓய்வு பெற்ற கிரிக்கெட் ஜாம்பவான்களை மீண்டும்…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க விஞ்ஞானி லெக்ஸ் பிரிட்மெனின் பாட்காஸ்டர் லெக்ஸ் ஃப்ரிட்மேனுடனான நேர்காணலில், "இந்தியாவா? பாகிஸ்தானா?…
சென்னை : தமிழ்நாடு அரசின் பொது நிதிநிலை அறிக்கை கடந்த 14-ஆம் தேதியும், வேளாண்மைக்கான நிதிநிலை அறிக்கையை 15-ஆம் தேதியும் தாக்கல்…
சென்னை : தமிழ்நாடு சட்டமன்றத்தில் 2025-26 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடங்குகிறது. தமிழ்நாடு அரசின் பொது…
சென்னை : ஏ.ஆர்.ரஹ்மான் திடீரென உடல்நிலை சரியில்லாமல் இன்று காலை 7:30 மணியளவில் நெஞ்சு வலி காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில்…
சென்னை : தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணாமாக, தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…