போதைப்பொருள் வழக்கு : சிங்கப்பூரில் தூக்கிலிடப்பட்ட மனநலம் குன்றிய இந்தியர் …!
இந்திய வம்சாவளியை சேர்ந்த நாகேந்திரன் தர்மலிங்கம் எனும் 34 வயதுடைய நபர் மலேசியாவில் வசித்து வருகிறார். இவர் கடந்த 2009ஆம் ஆண்டு 42.72 கிராம் எடையுள்ள ஹெராயின் எனும் போதை பொருளை சிங்கப்பூருக்குள் கடத்தியதற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்னதாக இவருக்கு தூக்குத் தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இன்று காலை நாகேந்திரன் தர்மலிங்கம் சிங்கப்பூரில் வைத்து தூக்கிலிடப்பட்டுள்ளார். தூக்கிலிடப்பட்ட தர்மலிங்கத்தின் உடல் வடக்கு தீபகற்ப மலேசியாவில் உள்ள ஈப்போ எனும் நகரில் வசித்து வரும் தர்மலிங்கத்தின் சகோதரர் நவீன் குமாரிடம் கொடுக்கப்படும் என கூறப்படுகிறது.
தூக்கிலிடப்பட்ட இந்திய வம்சாவளியை சேர்ந்த நாகேந்திரன் மனநலம் குன்றியவர் என கூறப்படுகிறது. தர்மலிங்கம் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதால் அவரை தூக்கிலிடுவதற்கு பல எதிர்ப்புகள் எழுந்துள்ளது. இருந்தாலும் அவர் இன்று தூக்கிலிடப்பட்ட செய்தியை அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.