ஜம்மு – காஷ்மீரில் வெடி பொருள்களுடன் பறந்த ட்ரோனை சுட்டு வீழ்த்திய பாதுகாப்பு படையினர்.
ஜம்மு – காஷ்மீரில் சமீப நாட்களாக ட்ரோன்கள் பறப்பது வழக்கமாகி உள்ளது. ஆனால்,பாதுகாப்பு படையினர் தீவிரமாக செயல்பட்டு, ட்ரோன்களின் நடமாட்டம் குறித்து கண்காணித்து வருகின்றனர்.
வெடிபொருளுடன் பறந்த ட்ரோன்
ஜம்மு – காஷ்மீரில் பாகிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள, கனச்சக் என்ற இடத்தில் வெடிபொருள்களுடன் ஒரு ட்ரோன் பறந்துள்ளது. இந்த ட்ரொனை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தியுள்ளனர்.
ட்ரோன் நடமாட்டத்தின் பின்னணி
சுட்டு வீழ்த்தப்பட்ட ட்ரொனை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதில் வெடிபொருட்கள் இருந்தது தெரியவந்துள்ளது. மேலும், ட்ரோன் நடவடிக்கையின் பின்னணியில் பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தைபா (எல்இடி) உள்ளதா என்பதையும், முந்தைய நிகழ்வுகளைப் போலவே பயங்கரவாத தாக்குதலுக்கு இந்த ட்ரோன் பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பது தொடர்பாகவும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்கின்றனர்.
ஜம்மு-காஷ்மீரில் ட்ரோன்களின் நடமாட்டம் முதல் முறையல்ல. ஏற்கனவே, ஜூன் 27 அன்று ஜம்மு விமான நிலையத்தில் நடந்த ட்ரான் தாக்குதலில் இரண்டு வீரர்கள் காயமடைந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து, அங்கு அடிக்கடி ட்ரோன்களின் நடமாட்டம் காணப்படுகிறது.
டிஜிபி தில்பாக் சிங்கின் உத்தரவு
ட்ரோன் நடவடிக்கைகளின் மத்தியில், ஜம்மு-காஷ்மீர் டிஜிபி தில்பாக் சிங் சமீபத்தில் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு, பயங்கரவாத அமைப்புகள் தொடர்ந்து ட்ரோன்களைப் பயன்படுத்த முயற்சிப்பதால் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை : பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள டிராகன் திரைப்படம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக படக்குழு…
சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட் ஜார்ஜ்…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதற்காக இன்று மும்பையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றும்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட்…
டெல்லி : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி டெல்லி மாநிலத்தில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பொதுத்தேர்தல்…