ஓட்டுநர் உரிமம், ஆதார் அட்டை.. ஜூன் 1 முதல் புதிய விதிமுறை மாற்றம்.!
டெல்லி : ஜூன் 1ம் தேதி ஆதார் கார்டு புதுப்பித்தலில் இருந்து டிரைவிங் லைசென்ஸ் என அவற்றின் விதிகளில் மாற்றம் ஏற்படுகிறது.
ஒவ்வொரு புதிய மாத தொடக்கத்திலும், அரசு துறைகளுக்கான விதிகள் மாறும், சீரான தன்மையை பராமரிக்க புதிய மாதத்தின் தொடக்கத்தில் இருந்து மாற்றங்களை செயல்படுத்தப்படுகிறது. அந்த வகையில், வருகின்ற ஜூன் மாதம், சில முக்கிய சேவைகள் மற்றும் நாம் அன்றாட வாழ்வில் தேவைப்படும் ஓட்டுநர் உரிமம், கேஸ் சிலிண்டர்களின் விலையும் மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஓட்டுநர் உரிம விதிகள்
ஜூன் 1 முதல் ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான புதிய விதிமுறைகளை சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் மாற்றியதாக அறிவித்துள்ளது.
அதாவது, ஓட்டுநர் உரிமம் பெரும் விரும்பும் நபர்கள் இனி, RTO ஆஃபீஸுக்குப் பதிலாக தனியார் ஓட்டுநர் பயிற்சி மையங்களில் பெற்று கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, தனியார் ஓட்டுநர் பயிற்சி மையங்களில் ஓட்டுநர் உரிமத் தகுதிக்கான சோதனைகளை மேற்கொண்டு, சான்றிதழ்களை வழங்க முடியும் என தெரிவிக்கப்ட்டுள்ளது.
அது மட்டும் இல்லாமல், 18 வயது பூர்த்தி ஆகாதவர்கள் வாகனம் ஓட்டி பிடிபட்டால், வாகனத்தின் RC-யை ரத்து செய்யும் புதிய விதிமுறை ஜூன் 1 முதல் அமுலுக்கு வருகிறது. மேலும் ரூ.25,000 அபராதம் விதிக்கப்படுவதோடு, 25 வயது வரை ஓட்டுநர் உரிமம் வழங்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆதார் புதுப்பித்தல்
உங்கள் பழைய ஆதார் அட்டையைப் புதுப்பிக்க விரும்பினால், ஜூன் 1 முதல் 14 வரை திருத்தம் செய்து கொள்ளலாம். உங்கள் ஆதாரைப் புதுப்பிக்க, நீங்கள் அதை ஆன்லைனிலும் செய்யலாம். இல்லையென்றால், அதனை ஆஃப்லைனில் செய்யலாம், ஆனால் இவ்வாறு புதுப்பிப்புக்க ரூ.50 செலுத்த வேண்டும்.
சிலிண்டர் விலை
வீடு அல்லது வணிக எல்பிஜி சிலிண்டர் விலைகள் ஒவ்வொரு மாதமும் முதல் நாளில் விலை மாற்றம் காணப்படுவது போல், ஜூன் 1-ஆம் தேதி விலை மாற்றம் இருக்கும். ஆனால், கடந்த மாதம் எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்கள் வணிக சிலிண்டர்களின் விலையை குறைத்ததால், ஜூன் மாதத்தில் சிலிண்டர் விலையை மீண்டும் குறைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஒவ்வொரு நாளும் போலவே, ஜூன் 1-ம் தேதி பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது