டிரைவர் இல்லாத ரயில் சேவை – வரும் 28 ஆம் தேதி திறந்து வைக்கிறார் பிரதமர்.!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
நாட்டின் முதல் டிரைவர் இல்லாத ரயில் சேவையை பிரதமர் மோடி வரும் 28-ஆம் தேதி டெல்லியில் கொடியசதைத்து தொடங்கி வைக்கவுள்ளார்.
டெல்லி மெட்ரோவின் மெஜந்தா பாதையில் டிசம்பர் 28 ஆம் தேதி நாட்டின் முதல் முழுமையான (automatic) டிரைவர் இல்லாத ரயில் சேவையை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைக்க உள்ளார் என்று டெல்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் (டிஎம்ஆர்சி) இன்று அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
பிரதமர் மோடி நாட்டின் முதல் முழுமையான (automatic) டிரைவர் இல்லாத ரயில் சேவையை 37 கி.மீ. மெஜந்தா பாதையில் (ஜனக்புரி மேற்கு முதல் தாவரவியல் பூங்கா மெட்ரோ நிலையம் வரை) தொடங்கி வைக்கிறார். மேலும், பயணத்திற்கான முழு செயல்பாட்டு தேசிய பொது இயக்கம் அட்டையையும் (என்.சி.எம்.சி) தொடங்கவுள்ளார் கூறப்படுகிறது.
“ஒன் நேஷன் ஒன் கார்டு” என்று அழைக்கப்படும் என்.சி.எம்.சி என்பது ஒரு இயங்கக்கூடிய போக்குவரத்து அட்டையாகும். இது நாடு முழுவதும் மெட்ரோ மற்றும் பஸ் சேவைகளைப் பயன்படுத்துதல், சுங்கவரி, பார்க்கிங் மற்றும் சில்லறை ஷாப்பிங் மற்றும் பணத்தை திரும்பப் பெறுதல் உள்ளிட்ட பல வகையான போக்குவரத்துக் கட்டணங்களை வைத்திருப்பவர்களுக்கு அனுமதிக்கிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
டெல்லியில் பாஜக வெற்றி! மக்களுக்கு நன்றி தெரிவித்த பிரதமர் மோடி!
February 8, 2025![narendra modi HAPPY](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/narendra-modi-HAPPY-.webp)
ஈரோடு : நாதக பெற்ற வாக்குகள் விபத்துக்கு சமம்..திமுக வேட்பாளர் சந்திரகுமார் பேச்சு!
February 8, 2025![V. C. Chandhirakumar](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/V.-C.-Chandhirakumar.webp)
18 நாட்கள் 36 கதாபாத்திரங்கள்.. நாளை முதல் மோகன் லால் நடிக்கும் ‘எம்புரான்’ படத்தின் அப்டேட்.!
February 8, 2025![L2E EMPURAAN](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/L2E-EMPURAAN.webp)
அதிர்ச்சி மேல் அதிர்ச்சி! கெஜ்ரிவால் தோல்வி., மணீஷ் சிசோடியா தோல்வி!
February 8, 2025![Arvind Kejriwal - Manish sisodia](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Arvind-Kejriwal-Manish-sisodia.webp)