டிரைவர் இல்லா ரயில் சேவை – திறந்துவைக்கவுள்ளார் முதல்வர்!
நாட்டின் முதல் ஆளில்லா மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் இந்த மத இறுதியில் துவங்கிவைக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
டெல்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் ஜனக்புரியின் மேற்கு மற்றும் தாவரவியல் பூங்கா உள்ள மெஜந்தா பாதையில் நாட்டின் முதல் ஆள் இல்லாத மெட்ரோ ரயில் சேவையை இந்த மாதத்தின் இறுதியில் பிரதமர் மோடி அவர்களால் கொடியசைத்து துவங்கி வைக்கப்படும் என தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் டிரைவர் இல்லாத தங்களது மெட்ரோ ரயில் நாட்டின் முதல் ரயில் சேவையாக இருக்கும் எனவும், இது தற்பொழுது கொடியேற்றி துவக்கி வைக்க தயாராக உள்ளதாகவும், தங்களது சார்பில் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 2002ஆம் ஆண்டு மெட்ரோ தனது வணிக நடவடிக்கையினை முதல் முறை டெல்லியில் துவங்கிய பொழுது கிறிஸ்துமஸ் தினத்தன்று அப்போதைய பிரதமராக இருந்த அடல் பிகாரி வாஜ்பாய் அவர்கள் மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனில் முதல் நீளத்தை திறந்து வைத்ததாகவும், தற்பொழுது நாளொன்றுக்கு 26 லட்சத்துக்கும் அதிகமானோர் பயணம் செய்யக்கூடிய அளவிற்கு மெட்ரோ ரயில் சேவை உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த டிரைவர் இல்லாத மெட்ரோ ரயில் சேவை மற்றும் மெஜந்தா மற்றும் பிங்க் பாதைகளில் இயக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.