‘மோடி ஜிந்தாபாத்’ என கோஷமிட மறுத்தால் தாக்கப்பட்ட டிரைவர்..! தாக்கியவர்கள் கைது.!

ராஜஸ்தானின் சிகார் மாவட்டத்தில் 52 வயதான ஆட்டோ டிரைவர் அருகிலுள்ள கிராமத்திற்கு பயணிகளை இறக்கிவிட்டு திரும்பி வந்தபோது, ‘ஜெய் ஸ்ரீ ராம்’ மற்றும் ‘மோடி ஜிந்தாபாத்’ என்று கோஷமிட்டு இரண்டு நபர்கள் வந்துள்ளனர். அப்போது, அவர்கள் ஆட்டோ டிரைவரை ‘ஜெய் ஸ்ரீ ராம்’ மற்றும் ‘மோடி ஜிந்தாபாத்’ என்று கோஷமிட கூறி உள்ளனர்.
அவர் கோஷமிடததால் அந்த இரண்டு நபர்கள் ஆட்டோ டிரைவரை தாக்கி உள்ளனர்.இந்த தாக்கியதில் ஆட்டோ டிரைவருக்கு பற்கள் உடைந்து, வீங்கிய கண் மற்றும் கன்னத்தில் காயங்கள் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து ஆட்டோ டிரைவர் கடந்த வெள்ளிக்கிழமை தன்னை இரண்டு நபர்கள் தாக்கியதாக போலீசாரிடம் புகார் கொடுத்தார். அந்த புகாரில்,
என்னை தாக்கிய இரண்டு பேரில் ஒருவர் ‘ஜெய் ஸ்ரீ ராம்’ மற்றும் ‘மோடி ஜிந்தாபாத்’ என்று கோஷமிடும்படி கட்டாயப்படுத்தினர். நான் மறுத்துவிட்டேன். பின்னர், அவர் என்னை அறைந்தார். நான் என் டாக்ஸியை எடுத்துக்கொண்டு சிகரை நோக்கி ஓட முயன்றேன். ஆனால், அவர்கள் தங்கள் காரில் என்னைப் பின்தொடர்ந்து ஜக்மல்பூரா அருகே என் வாகனத்தை நிறுத்தினர்.
அவர்கள் என்னை வாகனத்திலிருந்து இறங்கும்படி கட்டாயப்படுத்தினர். பிறகு அவர்கள் என்னை மோசமாக அடித்தார்கள் என்று புகாரில் தெரிவித்தார். புகாரின் அடைப்படையில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், எஃப்.ஐ.ஆரில் குறிப்பிடப்பட்ட இருவரையும் ராஜஸ்தான் போலீசார் நேற்று கைது செய்துள்ளனர்.