கர்ப்பிணியை காப்பாற்ற ரயில் நடைமேடையில் ஆட்டோ ஓட்டியதால் டிரைவர் கைது !
மும்மையில் உள்ள லோக்கல் ரயிலில் கடந்த 4-ம் தேதி கர்ப்பிணி பெண் ஒருவர் பயணம் செய்தார். கடந்த சில வாரங்களாக மும்பையில் கன மழை பெய்து வருகிறது. கடந்த 4-ம் தேதி மும்பையில் பல இடங்களில் பலத்த மழை பெய்தது.
கன மழையால் தண்டவாளங்களில் வெள்ளம் சென்றதால் அப்பெண் பயணம் செய்த லோக்கல் ரயில் விரார் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது. அப்போது அப்பெண்ணிற்கு பிரசவ வலி ஏற்பட்டது.இதை தொடர்ந்து அவரது கணவர் மருத்து வமனைக்கு செல்ல ரயில் நிலையத்தின் வெளியில் ஆட்டோ ஒன்றை பிடித்து வந்து உள்ளார்.
Mumbai: Woman’s husband boarded the auto-rickshaw outside the railway station & brought it inside after the local train that they boarded to take her to the hospital got cancelled due to water-logging on railway tracks. https://t.co/JB0VEOuHqK
— ANI (@ANI) August 6, 2019
அந்த ஆட்டோ டிரைவர் ரயில் நிலையத்தின் நடைமேடையில் ஆட்டோவை ஒட்டி சென்று அந்த பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்து சென்று உள்ளார். ஆட்டோவை நடைமேடையில் ஒட்டியதால் ஆட்டோ டிரைவரை கைது செய்யப்பட்டு பின்னர் எச்சரிக்கை கொடுத்து போலீசார் விடுவித்தனர்.
அப்பெண்ணை சரியான நேரத்தில் மருத்துவமனைக்கு அழைத்து சென்றதால் பெண்குழந்தை பிறந்தது.தற்போது தாயும் ,சேயும் நலமாக உள்ளனர்.