பெங்களூரில் 2 நாட்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம்
BWSSB பம்பிங் ஸ்டேஷன் நீரில் மூழ்கியதால் பெங்களூருக்கு குடிநீர் விநியோகம் 2 நாட்களுக்கு நிறுத்தப்படும்.
கனமழை காரணமாக கர்நாடகாவின் மாண்டியா மாவட்டத்தில் உள்ள பெங்களூரு நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரிய (BWSSB) நீரேற்று நிலையம் நீரில் மூழ்கியது. அதனால் காவிரி ஆற்றில் இருந்து பெங்களூருவுக்கு குடிநீர் விநியோகம் இரண்டு நாட்களுக்கு பாதிக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் கன மழைக்குப் பிறகு சாலைகளில் தண்ணீர் தேங்கி இருப்பதால் போக்குவரத்து நெரிசல் மற்றும் தெருக்களில் படகுகள் மூலம் மக்கள் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனிடையே, கனமழையால் நகரில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதோடு மட்டுமல்லாமல், பெங்களூரு விமான நிலையத்திலும் பரபரப்பு ஏற்பட்டது.