கொரோனா பரவுவதை தடுக்க மாட்டு சிறுநீர் குடிப்பது நல்லது எனக் கூறிய உத்தரபிரதேச மாநிலத்தில் பாஜக எம்எல்ஏ சுரேந்திர சிங் அவர்கள், மாட்டு சிறுநீர் குடிப்பதை வீடியோவாகவும் பதிவு செய்து வெளியிட்டுள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் நாளுக்கு நாள் மக்கள் கொரோனாவை ஒழிப்பதற்கான பல்வேறு வழிகளை தேடி வருகின்றனர். தடுப்பூசி போடுவது ஒரு வழியாக இருந்தாலும், இயற்கை வைத்தியம் மூலமாக கொரோனாவை ஒழிக்க முடியும் என பலர் நம்புகின்றனர் .குறிப்பாக சிலர் மாட்டின் சிறுநீரகம் மூலமாகவும் கொரோனா பரவுவதை தடுக்க முடியும் என கூறி வருகின்றனர். இதேபோல உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பைரியா எனும் பகுதியை சேர்ந்த பாஜக எம்எல்ஏ சுரேந்திர சிங் என்பவர் கொரோனாவில் இருந்து மக்களை பாதுகாப்பதற்கு மாட்டு சிறுநீர் உதவும் என கூறியுள்ளார்.
மேலும் அந்த வீடியோவில் அவர் மாட்டு சிறுநீரை குடிப்பதையும் பதிவிட்டுள்ளார். இது குறித்து தெரிவித்துள்ள அவர், ஒரு நாளைக்கு 18 மணி நேரம் மக்களுக்காக சேவை செய்த போதிலும், நான் ஆரோக்கியமாக இருப்பதற்கு காரணம் மாட்டு சிறுநீர் தான் என கூறியுள்ளார். மேலும் இந்த மருந்தை உட்கொள்வதால் கொரோனா மட்டுமல்ல வேறு எந்த ஒரு இதய வியாதிகள் கூட நம்மை அண்டாது எனவும் தெரிவித்துள்ளார். மேலும் இதை எப்படி குடிக்க வேண்டும் என்றால் மூன்று மூடி மாட்டு சிறுநீர் எடுத்து ஒரு கிளாஸ் தண்ணீரில் கலந்து அதை அப்படியே குடித்து விட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
அது மட்டுமல்லாமல் இதை குடித்து அரை மணி நேரத்திற்கு எதுவும் உட்கொள்ள கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார், மேலும் இவர் பதஞ்சலியின் மாட்டு சிறுநீர் கொண்ட பாட்டிலில் இருந்து தான் இதை குடித்து காண்பித்துள்ளார். இது போன்ற பதஞ்சலியின் மாட்டு சிறுநீர் நேரடியாக உங்களுக்கு கிடைக்கவில்லை என்றால் ஆரோக்கியத்தைப் பேணுவதற்காக மஞ்சள் தூளை லேசாக வறுத்து உட்கொள்ளுங்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.
இந்த வருடத்திற்கான முதல் தமிழக சட்டப்பேரவையின் கூட்டத்தொடர் நேற்று நடைபெற்ற நிலையில், ஆளுநர் கலந்துகொண்டு உரையாற்றுவார் என கூறப்பட்டது. ஆனால்,…
சென்னை : தென்னிந்திய சினிமாவில் உச்ச நடிகையாக உள்ள நயன்தரா - இயக்குனர் விக்னேஷ் சிவன் திருமணம் கடந்த 2022ஆம்…
நியூ யார்க் : குல்தீப் குமார் எனும் 35 வயது மதிக்கத்தக்க நபர் அமெரிக்காவில் பணியாற்றி வந்துள்ளார். இவர் கடந்த…
டெல்லி : அடுத்த மாதம் (பிப்ரவரி) தலைநகர் டெல்லியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான தேர்தல் பரப்புரை வேலைகளை…
கர்நாடகா: சினாவில் பரவி வரும் HMPV தொற்றானது, இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. சளி, இருமல், தொண்டை எரிச்சல்,…
சென்னை : சீனாவில் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை பாதிக்கும் HMPV தொற்றானது, இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.…