இந்தியாவின் 15வது குடியரசுத் தலைவராகிறார் பாஜக கூட்டணி சார்பில் போட்டியிட்ட திரௌபதி முர்மு.
இந்தியாவின் 14வது குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் பதவிக்காலம் இன்னும் சில நாட்களில் முடிவடைய உள்ள நிலையில், 15வது குடியரசு தலைவரை தேர்ந்தெடுக்கும் தேர்தல் கடந்த (ஜூலை) 18ஆம் தேதி நடைபெற்றது. இதில், நாட்டின் பாராளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் தவறாமல் வாக்களித்தனர்.
இன்று வாக்கு எண்ணிக்கை காலையிலேயே தொடங்கியது. இதில் ஆளும் பாஜக கூட்டணி சார்பில் திரௌபதி முர்மு அவர்களும் , காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்ஹா அவர்களும் போட்டியிட்டனர்.
எப்படியும் ஆளுங்கட்சி குடியரசு தலைவர் வேட்பாளருக்கு தான் வெற்றிவாய்ப்பு என்பது போல வாக்கு எண்ணிக்கை ஆரம்பித்த முதலே திரௌபதி முர்மு முன்னிலை வகித்து வந்தார்.
இந்நிலையில் இந்தியாவின் 15வது குடியரசு தலைவர் பதவிக்கு பாஜக கூட்டணி சார்பில் போட்டியிட்ட திரௌபதி முர்மு வெற்றி பெற்றதாக அதைகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வாக்குகள்:
குடியரசு தலைவர் தேர்தலில் மொத்தமாக 4754 வாக்குகள் பதிவாகின, அதில் 4701 செல்லுபடியாகும் & 53 செல்லாதவை இதில் பாஜக கூட்டணி வேட்பாளர் திரௌபதி முர்மு 2824 முதல் முதல் விருப்பு வாக்குகளை(அதன் மதிப்பு 6,76,803) பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
எதிர்க்கட்சிகளின் கூட்டணி வேட்பாளரான யஷ்வந்த் சின்ஹா 1,877 முதல் விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார் அதன் மதிப்பு 3,80,177.
ஜனாதிபதி தேர்தலில் திரௌபதி முர்முவுக்கு 64 சதவீத வாக்குகளும், யஷ்வந்த் சின்ஹாவின் 36 சதவீத வாக்குகளும் பெற்றுள்ளனர்.
திரௌபதி முர்மு குடியரசு தலைவர் பதவிக்கு வெற்றிபெற தேவையான வாக்குகளின் ஒதுக்கீட்டை விட அதிகமாக இருந்ததால் இந்திய குடியரசுத் தலைவர் பதவிக்கு அவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்று தேர்தல் அதிகாரி பிசி மோடி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
சென்னை : சென்னை அடையாறு முத்தமிழ் பேரவை சிவாஜி நினைவிடம் அருகே, திராவிட இயக்கத் தமிழர் பேரவை நடத்தும் "திராவிடமே…
சென்னை : கடந்த மாதம் 27-ல் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தவெக கட்சியின் முதல் மாநாடு நடைபெற்றது. தவெக வெற்றிக்…
கோவை : முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் திமுக செய்தி தொடர்பாளருமான கோவை செல்வராஜ் (66) மாரடைப்பால் இன்று காலமானார். திருப்பதியில்…
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் 'அமரன்' திரைப்படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதாக குற்றச்சாட்டை முன்வைத்து எஸ்டிபிஐ கட்சியினர், கோவை,…
ஐரோப்பா : மறைந்த பிரிட்டன் அரசி எலிசபெத் இந்த மண்ணைவிட்டு மறைந்தாலும் அவர் பயன்படுத்திய பொருட்கள் பிரமாண்ட விலைக்கு ஏலத்தில்…
சென்னை : நடிகர் சூர்யாவின் “கங்குவா” படத்தை வெளியிடத் தடையில்லை என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ரூ.55 கோடி ரூபாயை வழங்காமல்…