இந்தியாவின் 15வது குடியரசு தலைவராகிறார் பாஜக கூட்டணி சார்பில் போட்டியிட்ட திரௌபதி முர்மு.
இந்தியாவின் 14வது குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் பதவிக்காலம் இன்னும் சில நாட்களில் முடிவடைய உள்ள நிலையில், 15வது குடியரசு தலைவரை தேர்ந்தெடுக்கும் தேர்தல் கடந்த (ஜூலை) 18ஆம் தேதி நடைபெற்றது. இதில், நாட்டின் பாராளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் தவறாமல் வாக்களித்தனர்.
இன்று வாக்கு எண்ணிக்கை காலையிலேயே தொடங்கியது. இதில் ஆளும் பாஜக கூட்டணி சார்பில் திரௌபதி முர்மு அவர்களும் , காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்ஹா அவர்களும் போட்டியிட்டனர்.
எப்படியும் ஆளுங்கட்சி குடியரசு தலைவர் வேட்பாளருக்கு தான் வெற்றிவாய்ப்பு என்பது போல வாக்கு எண்ணிக்கை ஆரம்பித்த முதலே திரௌபதி முர்மு முன்னிலை வகித்து வந்தார்.
இந்நிலையில் மூன்று சுற்றுகளுக்குப் பிறகு, ஒட்டுமொத்தமாக மொத்தம் – மொத்த செல்லுபடியாகும் வாக்குகள் 3219 ஆக அதன் மொத்த மதிப்பு 8,38,839.
இதில் திரௌபதி முர்மு 2161 வாக்குகளாக அதன் மதிப்பில் 5,77,777 பெற்றுள்ளார். யஷ்வந்த் சின்ஹா 1058 வாக்குகளாக அதன் மதிப்பில் 2,61,062 பெற்றுள்ளார் என்று மாநிலங்களவை பொதுச் செயலாளர் பி.சி.மோடி தெரிவித்தார்.
இதன் மூலம் இந்தியாவின் 15வது குடியரசு தலைவராக பொறுப்பேற்க உள்ளார் திரௌபதி முர்மு.
இம்மாதம் 24ஆம் தேதி தற்போதைய குடியரசு தலைவரின் பதவிக்காலம் முடியும் நிலையில், 25ஆம் தேதி திரௌபதி முர்மு 15 வது குடியரசு தலைவராக பொறுப்பேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…
திருப்பதி : இந்திய கிரிக்கெட் அணி அண்மையில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 3-1…
மதுரை : தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அதிலும்…
சென்னை : இன்று பொங்கல் தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுதுவம் இன்று, நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய தினங்கள்…
சென்னை :கரும்புச்சாறை வைத்து பொங்கல் ரெசிபி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்: பச்சரிசி…
சென்னை: துபாயில் நடைபெற்ற வரும் 24 மணி நேர கார் பந்தயத்தில் 922 போர்ஷே கார் பிரிவில், நடிகர் அஜித்குமாரின்…