சர்ச்சைக்குள்ளான வக்ஃபு சட்டத் திருத்த மசோதாவுக்கு திரெளபதி முர்மு ஒப்புதல்.!

வக்ஃபு சட்டத் திருத்தங்களுக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்ததாக மத்திய சட்டத்துறை அமைச்சகம் அரசிதழில் வெளியிட்டுள்ளது.

Waqf Amendment Bill - rashtrapatibhvn

டெல்லி : வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பு காரணமாக, மசோதா நாடாளுமன்றக் கூட்டுக்குழுவுக்கு அனுப்பப்பட்டு, பல திருத்தங்களுடன் மீண்டும் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்ட பின்னர், குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன் இது சட்டமாகியுள்ளது. ஆம், வக்ஃபு சட்டத் திருத்தங்களுக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்ததாக மத்திய சட்டத்துறை அமைச்சகம் அரசிதழில் வெளியிட்டுள்ளது.

மக்களவையில் கடந்த ஏப்ரல் 3, 2025 அதிகாலை 288 ஆதரவுகள் 232 எதிர்ப்பு வாக்குகளுடன் இது மக்களவையில் நிறைவேற்றப்பட்டிருந்தது.  அதனை தொடர்ந்து மாநிலங்களவையிலும் நிறைவேறியது. கடந்த 4ம் தேதி மாநிலங்களவைவில் சுமார் 12 மணி நேர விவாதத்திற்குப் பிறகு, மாநிலங்களவையில் இந்த மசோதா 128 எம்.பி.க்களின் ஆதரவு வாக்குகளுடனும், 95 எம்.பி.க்களின் எதிர்ப்பு வாக்குகளுடனும் நிறைவேறியது.

இந்நிலையில், குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு வக்ஃபு சட்டத் திருத்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து அமலுக்கு வந்தது புதிய வக்ஃபு சட்டம். இதற்கிடையே, வக்பு வாரிய திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் வழக்கு தொடர்ந்துள்ளன. இந்த மசோதா, 1995 ஆம் ஆண்டு வக்ஃபு சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளும் நோக்கில் மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்