மக்களவை தேர்தலில் காங்கிரஸ் 40 இடங்களில் வெல்ல முடியுமா? மம்தா பானர்ஜி கடும் தாக்கு
காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சனம் செய்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேசியுள்ளார். ’இந்தியா’ கூட்டணியில் திரிணாமுல் காங்கிரஸ் இடம்பெற்ற நிலையில் மக்களவை தேர்தலில் மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடும் என அக்கட்சியின் தலைவரும், அம்மாநில முதல்வருமான மம்தா பானர்ஜி அண்மையில் அறிவித்தார்.
இந்த நிலையில் மக்களவை தேர்தலை முன்னிட்டு அவர் பாத யாத்திரை மேற்கொண்டுள்ளார். இதன்போது நடந்த பொதுக்கூட்டத்தில் மம்தா பானர்ஜி பேசும் போது, “காங்கிரஸ் கட்சியிடம் 300 தொகுதிகளில் போட்டியிடுங்கள், மீதமுள்ள தொகுதிகளில் ‘இந்தியா’ கூட்டணி கட்சிகள் போட்டியிடும் என நான் கூறியும் கேட்கவில்லை.
தற்போது காங்கிரஸ் 300-ல் 40 தொகுதிகளில் வெற்றிபெறுமா என்று கூட தெரியவில்லை. பிறகு ஏன் இவ்வளவு திமிர்? நாம் இந்தியா கூட்டணியில் இருக்கிறோம். குறைந்தபட்சம் நீங்கள் வங்காளத்திற்கு வருவதை என்னிடம் தெரிவித்திருக்கலாம். நீங்கள் வந்தது நிர்வாகத்தின் மூலம் எனக்கு தெரிய வந்தது. உங்களுக்கு தைரியம் இருந்தால் வாரணாசியில் பா.ஜ.கவை தோற்கடியுங்கள்.
ஹேமந்த் சோரனுக்கு 5 நாட்கள் அமலாக்கத்துறை காவல்
நீங்கள் முன்பு வெற்றி பெற்ற இடங்களில் கூட தோல்வியடைவீர்கள், நாம் உத்தரபிரதேசத்தில் ஒன்றாக இல்லை. நீங்கள் ராஜஸ்தானில் வெற்றி பெறவில்லை. அந்த இடங்களை வெல்லுங்கள். உங்களுக்கு எவ்வளவு தைரியம் இருக்கிறது என்று நான் பார்க்கிறேன்” என பேசியுள்ளார்.