ஒப்பந்தம் முடித்த பிறகும் வீட்டை காலி செய்யவில்லை என்றால் வாடகை இரு மடங்கு!
நாடு முழுவதும் உள்ள வீடுகள் மற்றும் அலுவலகத்தை வாடகை விடுபவர்களை முறைப் படுத்த அரசு ஒரு புதிய வரைவு சட்ட மசோதாவை தயாரித்து உள்ளது.அதன் படி வீட்டு உரிமையாளர் வாடகையை உயர்த்துவதற்கு மூன்று மாதத்திற்கு முன் எழுத்து பூர்வ நோட்டீஸ் ஒன்றை வாடகைக்கு குடி இருக்கும் நபரிடம் கொடுக்க வேண்டும்.
மேலும் வீட்டு உரிமையாளர் முன்பணமாக இரண்டு மாதம் வாடகையை மட்டும் வாங்க வேண்டும்.வீட்டு உரிமையாளர் மற்றும் வாடகைக்கு இருக்கும் நபர் இருவரும் தனித்தனியாக வாடகை ஒப்பந்தத்தின் நகலை தாக்கல் செய்ய வேண்டும்.
வீட்டை பழுது பார்க்கும் செலவை வீட்டு உரிமையாளர் ஏற்க வேண்டும் அப்படி இல்லை என்றால் வாடகையில் கழித்து கொள்ள இந்த சட்டம் வகை செய்கிறது.வாடகை பற்றிய பிரச்சனை தொடர்ந்தால் வீட்டு உரிமையாளர் அல்லது தாங்கி இருக்கும் நபர் புகார் கொடுத்தால் மாவட்ட குடியிருப்பு அதிகாரி வீட்டு வாடகையை நிர்ணயம் செய்யலாம்.
ஒப்பந்தம் முடித்த பிறகும் வீட்டை காலி செய்யவில்லை என்றால் முதல் இரண்டு மாதம் வாடகையை இரு மடங்கு செய்து கொள்ளலாம் தொடர்ந்தால் நான்கு மடங்கு வாடகையை உயர்த்தி கொள்ளலாம்.
இந்த சட்ட வரைவு மசோதா குறித்து மக்களிடம் கருத்துக் கேட்க அரசு ஆகஸ்ட் முதல் தேதி வரை காலக்கெடு கொடுத்து உள்ளது. model tenany act 2019 என்ற பெயரில் இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளது.