தற்போது பல்வேறு சிறப்பம்சங்களுடன் எம்.என்.பி சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. எம்.என்.பி சேவை முந்தைய கணக்குப்படி ஒரு நெட்வொர்கில் இருந்து மற்றொரு நெட்வொர்க்கிற்கு மாற்ற 15 நாட்கள் கால அவகாசம் ஆகும். இந்நிலையில் தற்போது டிராய் வெளியிட்ட அறிக்கையில், நெட்ஒர்க் சேவையை மாற்றும் விதிகள் எளிதாக்கி இன்று முதல் அமலுக்கு வந்தது. அதாவது மொபைல் சேவை வழங்கும் தொலைத் தொடர்பு நிறுவனத்தை இனி 3 நாட்களில் மாற்றிக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், மாற்றுவதற்கான வழிமுறை PORT என டைப் செய்து இடைவெளி விட்டு தங்களின் 10 இலக்கு மொபைல் எண்ணை டைப் செய்து 1900 என்ற எண்ணிற்கு மெசேஜ் செய்து போர்டபிலிட்டியை மாற்றிக் கொள்ளலாம். இதற்கான கட்டணம் ரூ.6.96 மட்டுமே என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நம்பருக்கு மெசேஜ் அனுப்பியதும் தங்களுக்கு வரும் மெசேஜை 30 நாட்களுக்குள் எப்போ வேண்டுமானாலும் பயன்படுத்தி நெட்வொர்க்கை மாற்றிக் கொள்ளலாம்.
இதையடுத்து UPC குறியீட்டு எண் மெசேஜ் மூலம் வழங்கப்படும். பின்னர் அருகில் உள்ள சேவைக்கு சென்று அதனை காண்பித்து அவர்கள் தரும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தரவேண்டும். கட்டணம் மற்றும் ஆதாரம் போன்றவற்றை அளித்தால் புதிய சிம் கார்டை நீங்கள் விரும்பும் சேவைக்கு அந்நிறுவனம் உங்களுக்கு வழங்கும். பின்பு அந்த எண்ணானது மூன்று நாட்களில் செயல்படுத்தபடும்.
பின்னர் இடைப்பட்ட காலத்தில் நெட்வொர்க் மாற்றம் விரும்பவில்லை என்றால் CANCEL என டைப் செய்து 1900 என்ற எண்ணிற்கு மெசேஜ் அனுப்பினால் விரைவில் நெட்வொர்க் மாற்றம் சேவை நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : ஏ.ஆர்.ரஹ்மான் திடீரென உடல்நிலை சரியில்லாமல் இன்று காலை 7:30 மணியளவில் நெஞ்சு வலி காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில்…
சென்னை : தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணாமாக, தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…
பாகிஸ்தான் :பலுசிஸ்தான் விடுதலைப் படை (Baloch Liberation Army - BLA) பாகிஸ்தானின் நோஷ்கி பகுதியில் பாகிஸ்தான் ராணுவப் படைகளின்…
ஏடன்: அமெரிக்கா ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது பெரிய அளவிலான தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்…
சென்னை : திடீர் உடல்நலக்குறைவால் ஏ.ஆர்.ரகுமான் சென்னை அப்போலோவில் இன்று காலை அனுமதிக்கப்பட்டார். இந்த செய்தியை கேட்ட உடன் முதல்வர்…
சென்னை : டாஸ்மாக் முறைகேடு விவகாரம் தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமலாக்கத் துறை மார்ச் 6, 2025ல்…