ரேபிட் கிட்டை பயன்படுத்த வேண்டாம் – ஐசிஎம்ஆர் பரபரப்பு அறிவிப்பு.!
சீனாவில் இருந்து இரண்டு நிறுவனங்களில் அனுப்பிய ரேபிட் டெஸ்ட் கருவிகளை பயன்படுத்த வேண்டாம் என்று ஐ.சி.எம்.ஆர் பரபரப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
சீனாவிடம் இருந்து வாங்கிய ரேபிட் டெஸ்ட் கருவிகளை பயன்படுத்த வேண்டும் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வலியுறுத்தியுள்ளது. சீனாவில் இருந்து இரண்டு நிறுவனங்கள் அனுப்பிய ரேபிட் டெஸ்ட் கருவிகளை பயன்படுத்த வேண்டாம் என்று கூறியுள்ளது. அதாவது, பையோ மெடிக்ஸ், வோன்ஃபோ ஆகிய நிறுவனங்களிடம் இருந்து வாங்கிய ரேபிட் டெஸ்ட் கருவிகளை பயன்படுத்த வேண்டும் என்று ஐ.சி.எம்.ஆர் பரபரப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ரேபிட் டெஸ்ட் கருவிகளை பயன்படுத்த வேண்டாம் என்ற அறிவிப்பை மாநில அரசுகளுக்கு ஐ.சி.எம்.ஆர் கடிதம் அனுப்பியுள்ளது. மேலும் RT மற்றும் PCR கருவிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. சீனாவை சேர்ந்த இரண்டு நிறுவனங்களிடம் இருந்து வாங்கிய ரேபிட் கருவிகளை திரும்ப ஒப்படைக்க ஐ.சி.எம்.ஆர் வலியுறுத்தியுள்ளது. இதனிடையே ரேபிட் டெஸ்ட் கருவியின் மூலம் கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட முடிவுகள் தவறாக வருகிறது என்று புகார் எழுந்த நிலையில், தற்போது சீனாவில் இருந்து வாங்கிய ரேபிட் டெஸ்ட் கருவிகளை பயன்படுத்த வேண்டாம் என்று ஐ.சி.எம்.ஆர் அறிவுறுத்தியுள்ளது.