வெற்று பேச்சு வேண்டாம்!! இந்தியாவுக்கு ஒரு தீர்வு தேவை – ராகுல் காந்தி

Default Image

இந்தியாவின் மிகப்பெரிய சுகாதார சவாலை மத்திய அரசு கையாண்டது குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விமர்சனம்.

50 வயதான காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இந்த வார தொடக்கத்தில் கொரோனா தொற்று உறுதியான நிலையில், சில நாட்களாக அவரது வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார். இந்த நிலையில், இந்தியாவின் மிகப்பெரிய சுகாதார சவாலை மத்திய அரசு கையாண்டது குறித்து பேசிய அவர், கேரளாவின் வயநாட்டைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி பிரதமர் மோடி உரையை குறித்துவைத்து வெற்று பேச்சு என கூறினார் என தெரிவித்தார்.

நான் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறேன். சோகமான செய்திகள் நாடு முழுவதும் இருந்து தொடர்ந்து வருவதை நான் காண்கிறேன். கொரோனாவால் மட்டும் இந்தியா பாதிக்கப்படவில்லை. அரசாங்கத்தின் மக்கள் விரோத கொள்கைகளால் பாதிக்கப்பட்டுள்ளது. நாட்டிற்கு வெற்று உரைகள் மற்றும் பயனற்ற பண்டிகைகள் தேவையில்லை. இந்தியாவுக்கு ஒரு தீர்வு தேவை என்று பதிவிட்டுள்ளார்.

தடுப்பூசி பாதுகாப்பு அதிகரிப்பதற்காக இந்த மாத தொடக்கத்தில் அரசாங்கத்தால் நான்கு நாள் “Tika Utsav” குறித்தும் குறிப்பிட்டார். இதனிடையே, நேற்று முன்தினம் நாட்டு மக்களிடம் பேசிய பிரதமர் மோடி, தொற்றுநோய்களின் அபாயகரமான எழுச்சிக்கு மத்தியில் மருத்துவ ஆக்ஸிஜன், மருத்துவமனை படுக்கைகள் மற்றும் தடுப்பூசிகள் கிடைப்பது குறித்து தேசத்திற்கு உறுதியளித்தார்.

நாட்டின் பல பகுதிகளுக்கு கட்டுப்பாடுகள் வரும்போது, முழு பொதுமுடக்கம் கடைசி முயற்சியாக இருக்க வேண்டும் என கூறினார். இரண்டாவது கொரோனா அலையால்  இந்தியா, ஒரே நாளில் 3.14 லட்சம் பேர் பாதிப்புக்குள்ளாகி உலக நாடுகளை பின்னுக்கு தள்ளியுள்ளது. 2,104 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live today update
empuraan controversy - kerla hc
Rohit sharma - MS Dhoni
japan megaquake
BJP State president K Annamalai
Heavy rains
ed chennai high court