பணம் வாங்காதீங்க…ராகுல் காந்தி கேள்விக்கு ‘நச்’ பதில் கொடுத்த ஷாருக்கான்..! வைரலாகும் வீடியோ..!!

பாலிவுட் நடிகர் ஷாருக்கானிடம் ராகுல் காந்தி ஆலோசனை கேட்கும் பழைய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
காங்கிரஸ் முக்கிய தலைவர் ராகுல் காந்தி கேட்ட கேள்விக்கு பாலிவுட் நடிகர் ஷாருக்கான் பதில் அளித்த பழைய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த 2008 ஆம் ஆண்டு இந்தியன் ஆஃப் தி இயர் (Indian of the Year) விருது வழங்கும் விழா நடைபெற்றது. அந்த விழாவில் ஷாருக்கானிடம் அரசியல்வாதிகளுக்கு நீங்கள் கூறும் ஒரு அறிவுரை என்ன.? என்று பார்வையாளர்கள் மத்தியில் அமர்ந்திருந்த ராகுல் காந்தி கேட்டார்.
அதற்கு முதலில் இது ஒரு எளிய கேள்வி என்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன் என்று கேலி செய்த ஷாருக்கான், பிறகு வெளிப்படையாக பதிலளித்தார். அவர் கூறுகையில், நான் பொய் சொல்லி, ஏமாற்றி பிழைப்பு நடத்துகிறேன், நான் ஒரு நடிகனாக இருப்பதால் எனக்குள் இருப்பதை நான் வெளிப்படையாக காட்டுகிறேன் என்றும் நாட்டை நடத்தும் மக்கள் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு, அவர்கள் நாட்டை நடத்த வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள் என்று கூறினார்.
மேலும், இது மிகவும் தன்னலமற்ற சேவை. அதனால் மேசையின் கீழ் இருந்து பணத்தை வாங்க வேண்டாம் எனவும் பிற நெறிமுறையற்ற செயல்களில் ஈடுபடாமல் முடிந்தவரை நேர்மையாக இருங்கள், அதைச் சரியாகச் செய்தால் நாம் அனைவரும் பணம் சம்பாதித்து அனைவரும் மகிழ்ச்சியாக இருப்போம் என்று ஷாருக்கான் அறிவுறுத்தினார்.
when he speaks you all just sit and listen to him ????✨#ShahRuhKhan pic.twitter.com/fAj52BRMoX
— srkvibe ???????? (Renu) – Fan account (@srkvibe) April 13, 2023
லேட்டஸ்ட் செய்திகள்
நெருங்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு..சென்னையில் வெளுத்து வாங்கும் கனமழை!
December 19, 2024
மும்பை படகு விபத்து : 13 பேர் பலி, 101 பேர் மீட்பு! மகாராஷ்டிரா முதலமைச்சர் தகவல்!
December 18, 2024
லோகேஷ் கனகராஜை கதறவிட்ட பாரத்! வெளியான சி(ரி)றப்பான வீடியோ இதோ…
December 18, 2024
“நாங்கள் அம்பேத்கருக்கு எதிரானவர்கள் அல்ல.,” அமித்ஷா விளக்கம்!
December 18, 2024