எனக்காக பொதுமக்களின் வாகனத்தை நிறுத்த வேண்டாம் – முதல்வர் ரங்கசாமி
தனது கார் வரும்போது எந்த சிக்னலையும் நிறுத்த வேண்டாம் என்று முதல்வர் ரங்கசாமி அறிவுறுத்தல்.
பொதுவாகவே ஆளுநர், முதல்வர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் பயணம் மேற்கொள்ளும் போது சாலைகளில் உள்ள சிக்னல்களை நிறுத்தி அவர்களை விரைந்து செல்ல போக்குவரத்து காவல்துறையினர் ஏற்பாடு செய்வது வழக்கம் தான்.
அந்த வகையில், முதல்வர் ரங்கசாமி அவர்கள் காரில் செல்லும் போது சிக்னலை நிறுத்தி வைத்து முதல்வரை மட்டும் செல்ல காவல்துறையினர் வழி விட்டனர். இதனை அடுத்து கடும் வெயிலில் மக்கள் காத்திருப்பதை கண்ட முதல்வர் ரங்கசாமி போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் அழைத்து தனது கார் வரும்போது எந்த சிக்னலையும் நிறுத்த வேண்டாம் என்றும், மக்களோடு மக்களாக நின்று முறைப்படி நானும் சாலையை கடக்கிறேன், எனக்காக மக்கள் பாதிக்கப்படக்கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
இதனை தொடர்ந்து இன்று சட்டப்பேரவைக்கு சென்ற முதல்வர் ரங்கசாமி மக்களோடு மக்களாக சிக்கனல்களில் நின்று, முறைப்படி சாலையை கடந்து சென்றார். முதல்வர் ரங்கசாமியின் இந்த செயலுக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.