கல்வியை அரசியல் ஆக்காதீங்க..மும்மொழியை ஏத்துக்கோங்க! தர்மேந்திர பிரதான் கடிதம்
தமிழ் மொழி, கலாச்சாரத்தை உலக அளவில் எடுத்துச் செல்வதில் பிரதமர் மோடி உறுதியாக உள்ளார் என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.

டெல்லி : மும்மொழி விவகாரம் பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்துள்ள நிலையில், இன்னுமே தமிழகத்தை சேர்ந்த அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். இது சர்ச்சையாக மாறுவதற்கு காரணமே புதிய கல்விக் கொள்கையை ஏற்கும் வரை தமிழக கல்வித்துறைக்கு நிதி தர இயலாது என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியது தான்.
இதற்கு கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்று வரும் சூழலில் சமீபத்தில் தமிழக பள்ளிக் கல்வித்துறைக்கு நிதி கோரி முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியிருந்தார். இதனையடுத்து, அதற்கு பதில் அளிக்கும் விதமாக மத்திய கல்வி துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதில் கடிதம் ஒன்றை எழுதி அதனை அறிக்கையாக வெளியீட்டு இருக்கிறார்.
அதில் “மாணவர்களின் நலனுக்கான கல்வியை அரசியல் ஆக்க வேண்டாம் என கூறியுள்ளார். இது குறித்து அவர் கடிதத்தில் கூறியதாவது ” நமது நாட்டின் கல்வி முறையின் எதிர்காலம் குறித்து மிகுந்த மரியாதையுடனும், ஆழ்ந்த பொறுப்புணர்வுடனும் நான் உங்களுக்கு எழுதுகிறேன். புதிய கல்விக் கொள்கை என்பது எந்த மொழியையும் திணிப்பதற்காண முயற்சி இல்லை.
பாஜக கட்சி அல்லாத கட்சிகள் ஆளும் மாநிலங்களில் கூட அரசியல் வேறுபாடுகளை எல்லாம் கடந்து இந்த புதிய கல்விக் கொள்கை ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. 1968ல் தொடங்கி இந்திய கல்வி திட்டத்தின் முதுகெலும்பாக இது உள்ளது. மும்மொழிக் கொள்கையை இதுவரை முறையாக செயல் படுத்தாதது என்னை பொறுத்தவரை துரதிர்ஷ்டவசமானது.
இளம் மாணவர்களின் எதிர்காலத்தை மனதில் வைத்து அரசியல் வேறுபாடுகளை கடந்து இந்த கொள்கையை அமல்படுத்த செயல்ப்ட வேண்டும். அதை விட்டுவிட்டு இப்படி புதிய கல்விக் கொள்கையை அரசியல் காரணங்களுக்காக ஒதுக்கினால் இதன் மூலம் மாணவர்கள் மட்டுமில்லை ஆசிரியர்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் இதனால் உருவாகும் வாய்ப்புகளை இழக்கலாம்.
சமக்ரா சிக்ஷா போன்ற மத்திய அரசு-ஆதரவு பெற்ற திட்டங்கள் அனைத்துமே புதிய கல்விக் கொள்கை உடன் கடந்த 2020 -ஆம் ஆண்டிலிருந்தே இணைக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக, PM SHRI பள்ளிகள் புதிய கல்விக் கொள்கையின் முன்மாதிரி பள்ளிகளாக கருதப்பட்டது. இந்த சூழலில், தமிழ்நாடு குறுகிய பார்வையுடன் புதிய கல்விக் கொள்கையை பார்ப்பது என்னை பொறுத்தவரை பொருத்தமற்றது என்று தான் சொல்வேன். அரசியல் வேறுபாடுகளை மறந்து NEP-ஐ (தேசிய கல்வி கொள்கை) அமல்படுத்து வேண்டும்.
சமூக மற்றும் கல்வி முன்னேற்றத்தில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. அதைப்போல, அனைவரையும் உள்ளடக்கிய கற்றல் சூழலை வளர்த்ததில் தமிழ்நாடு முன்னணியில் உள்ளது பல்வேறு மாற்றங்களை செய்யும் சீர்திருத்தங்களுக்கு தமிழ்நாடு முன்னோடியாக உள்ளது. இப்படியான தமிழ் மொழியை தமிழ் மொழி, கலாச்சாரத்தை உலக அளவில் எடுத்துச் செல்வதில் பிரதமர் மோடி உறுதியாக உள்ளார்.” எனவும் அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் காரணங்களுக்காக குறுகிய பார்வையுடனும், அச்சுறுத்தலை பயன்படுத்தியும் தேசிய கல்விக் கொள்கை 2020-ஐ ஒரு மாநிலம் ஆய்வு செய்வது மிகவும் பொருத்தமற்றது.
காலத்தால் அழியாத தமிழ் கலாச்சாரத்தையும், மொழியையும் உலக அளவில் மேம்படுத்தவும் பிரபலப்படுத்தவும் மாண்புமிகு பிரதமர் நரேந்திர… https://t.co/UQtRgoONTm
— Dharmendra Pradhan (@dpradhanbjp) February 21, 2025
ஏற்கனவே, இவருடைய முந்தயை பேச்சுக்கு கண்டனங்கள் எழுந்த நிலையில், தற்போது மீண்டும் பாஜக ஆளாத பல மாநிலங்கள் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தியுள்ளதால், தமிழ்நாடும் அமல்படுத்த வேண்டும் என கூறியுள்ளது இன்னும் பரபரப்பை ஏற்படுத்தி கண்டனங்களை எழுவதற்கு காரணமாக அமைந்துள்ளது.