H3N2 அலட்சியம் வேண்டாம்; அறிகுறிகள் மற்றும் தடுப்பது எப்படி?

Default Image

H3N2 எவ்வாறு பரவுகிறது மற்றும் ஏன் இந்த புதிய வைரஸை நீங்கள் தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதைப் பார்க்கலாம்….

H3N2 வைரஸ்:                                                                                             தற்போது அதிகரித்துவரும் இந்த எச்3என்2(H3N2) வைரஸின் தாக்கம், மீண்டும் மக்களை பீதியடைய வைத்துள்ளது. இந்த புதிய வைரஸை எதிர்த்து போராடுவதற்கு அதன் அடிப்படையை புரிந்து கொள்வது அவசியமாகிறது. கொரோனா தொற்றின் விளைவுகளிலிருந்து தவித்து, மெதுவாக மீண்டு வருகிற நிலையில் மீண்டும் இன்னொரு வைரஸ் பரவுவது பீதியை தூண்டுகிறது.

சமீபத்தில், இன்ஃப்ளூயன்ஸா H3N2 வைரஸ் நாட்டில் புதிய எச்சரிக்கையாக உள்ளது. வைரஸின் தொற்று நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றன. மேலும் அரசும் இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. கொரோனா மற்றும் இந்த H3N2 வைரஸ் என இரண்டிற்கும் கிட்டத்தட்ட தொண்டை புண், காய்ச்சல், மூக்கு ஒழுகுதல் போன்றவை  அறிகுறிகளாகும்.

எச்சரிக்கை:                                                                                                          இது குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) வல்லுநர்கள், கடந்த இரண்டு அல்லது மூன்று மாதங்களாக இந்தியாவில் வரும் தொடர் இருமல் மற்றும் காய்ச்சல் நோயாளிகள், இந்த H3N2 வைரஸினால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று எச்சரித்துள்ளனர்.

H3N2 அறிகுறிகள்:                                                                                                    குளிருதல், இருமல், காய்ச்சல், குமட்டல், வாந்தி, தொண்டை வலி, வயிற்றுப்போக்கு, தசைகள் மற்றும் உடலில் வலி, தும்மல் மற்றும் மூக்கு ஒழுகுதல் இந்த அறிகுறிகள் இருந்தால் அதை லேசாக எடுத்துக்கொள்ளாமல் மக்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது அவசியமாகிறது.

எவ்வாறு தடுப்பது?                                                                                                    விழாக்காலம் என்பதால் தேவையான இடைவெளிகளைப் பின்பற்றுவது மிகவும் முக்கியமானது. H3N2 இன்ஃப்ளூயன்ஸாவைத் தடுக்க, ஒவ்வொரு வருடமும் தடுப்பூசி போடுவது, அடிக்கடி சோப்பு மற்றும் தண்ணீரால் கைகளைக் கழுவுதல்.

நோய்வாய்ப்பட்ட நபர்களுடன் தொடர்பு கொள்வதைத் தவிர்ப்பது, தும்மும்போது அல்லது இருமும்போது வாய் மற்றும் மூக்கை மூடுவது, உடல்நிலை சரியில்லாமல் இருக்கும்போது பள்ளி அல்லது வேலையிலிருந்து விடுமுறை எடுத்துக்கொள்வது உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் மூலம் இதனைத் தடுக்கலாம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்