எங்களுக்கு மொய்ப்பணம், பரிசுகள் வேண்டாம்! அவற்றை போராடும் விவசாயிகளுக்கு கொடுங்கள்!

Default Image

பஞ்சாபில் நடந்த ஒரு கல்யாண வீட்டில், எங்களுக்கு மொய் பணம் வேண்டாம். பரிசுப்பொருட்களும் தர வேண்டாம். அதற்கு பதிலாக இந்த பணத்தை டெல்லியில் போராடும் விவசாயிகளுக்காக வழங்குங்கள் என கூறியுள்ளனர்.

மத்திய அரசின் வேளாண் சட்டத்தை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிற  நிலையில், இந்த போராட்டத்திற்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், சமாஜ்வாதி கட்சி தலைவர்,  இடதுசாரி முன்னணி தலைவர்கள் சீதாராம் யெச்சூரி, டி.ராஜா உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

இந்நிலையில், பஞ்சாபில் நடந்த ஒரு கல்யாண வீட்டில் மொய் பணம் வசூலிப்பதற்கு பதிலாக, அந்த பணத்தை பணத்தை போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு வழங்குமாறு திருமண வீட்டார் தெரிவித்துள்ளனர். பல்வேறு தரப்பிலிருந்தும், இதற்கு பாராட்டு குவிந்து வருகிற நிலையில், பஞ்சாப் தலைநகர் சண்டிகரில் இருந்து 250 கிலோமீட்டர் தொலைவில் உள்ள முக்தார் என்ற இடத்தில் நடைபெற்ற திருமண விழாவில் தான் இந்த நிகழ்வு அரங்கேறியுள்ளது.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், எங்களுக்கு மொய் பணம் வேண்டாம். பரிசுப்பொருட்களும் தர வேண்டாம். அதற்கு பதிலாக இந்த பணத்தை டெல்லியில் போராடும் விவசாயிகளுக்காக வழங்குங்கள் என மணமக்களை வாழ்த்த வரும் உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் திருமண வீட்டார் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து விவசாயிகளுக்கு உதவுங்கள் என குறிப்பிட்டு பணம் போடுவதற்கு தனியாக ஒரு பெட்டியும் வைத்துள்ளனர். அங்கு வரும் விருந்தினர்கள் அந்தப் பெட்டியில் பணத்தைப் போட்டுவிட்டு சென்றனர்.

இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.  திருமண வீட்டில் நடந்த இந்த மனிதநேயம் மிக்க செயலுக்கு அனைத்து தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்ற நிலையில், இதே போல் எல்லாரும் நமக்கு சோறு போடும் விவசாயிகளுக்கு உதவுங்கள் என்று நெட்டிசன்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்