2021-ம் ஆண்டுக்குள் இந்தியாவில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட ஏற்பாடு என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
குஜராத் மாநிலத்தில் புதிதாக அமைக்கப்படவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இன்று பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். காந்தேரி கிராமம் அருகே 201 ஏக்கர் பரப்பளவில் ரூ.1,195 கோடியில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படவுள்ளது. டெல்லியிலிருந்து காணொலி மூலம் அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி, நாட்டில் கொரோனா தொற்று குறைந்து வருவதாகவும், உலகின் மிகப் பெரிய தடுப்பூசி திட்டத்திற்கு இந்தியா தயாராகி வருவதாக தெரிவித்துள்ளார்.
2021-ம் ஆண்டுக்குள் இந்தியாவில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. கொரோனா தொற்றுக்கு எதிரான தடுப்பூசி திட்டத்திற்கான இறுதி கட்ட ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. தடுப்பூசி நாட்டின் அனைத்து இடங்களுக்கும் சென்றடைய பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த 2020 ஆம் ஆண்டு நமக்கு பல்வேறு விஷயங்களை கற்றுக் கொடுத்தது. இது சவால்கள் நிறைந்த ஆண்டாகும்.
நாட்டின் முன்னணி கொரோனா சுகாதார பணியாளர்களை நினைவில் கொள்வதற்கு ஆண்டின் கடைசி நாள் இதுவாகும் என குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்தியாவில் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டிற்கு வரும்போது பல்வேறு வதந்திகள் பரவ வாய்ப்பு உள்ளது. பொதுமக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளார். தனிப்பட்ட லாபங்களுக்காக சில நபர்கள் பல்வேறு வதந்திகளை பரப்பி வருகின்றனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, நேற்று…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில், மகாராஷ்டிராவில் 235 இடங்களை கைப்பற்றி…
சவுதி : 18வது ஐபிஎல் தொடரானது அடுத்த ஆண்டு மார்ச் 14 ம் தேதி தொடங்கி மே 25 ம்…
ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…
மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த நிலையில்,…