#BeAlert: இந்த மெசேஜ் வந்தால் இதை உடனே  செய்யுங்கள் இல்லையென்றால் உங்கள் பணம் சுவாகா- எஸ்பிஐ.!

Default Image

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா 44 கோடி வாடிக்கையாளர்களுக்கு யுபிஐ மோசடி குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது.

யுபிஐ மோசடிக்கு எதிராக எச்சரிக்கை:

ஆன்லைன் மோசடி அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, எஸ்பிஐ வாடிக்கையாளர்களை அவ்வப்போது எச்சரித்து வருகிறது. தற்போது யுபிஐ மோசடிக்கு எதிரான எச்சரிக்கையை விடுத்துள்ளது. உடனடி கடன் செயலியை பயன்படுத்த வேண்டாம் என ஏற்கனவே எஸ்பிஐ வாடிக்கையாளர்களை எச்சரித்திருந்தது.

எந்தவொரு கடிதமும் இல்லாமல் இரண்டு நிமிடங்களில் உங்களுக்கு கடன் வழங்குவதாகக் கூறும் எந்த உடனடி கடன் செயலியையும் பயன்படுத்தவேண்டும் என கூறியது. பெரும்பாலும் மக்கள் உடனடி கடன் செயலி பயன்படுத்தியதால், உடனடி கடன் செயலி முலம் பெறப்படும் கடனுக்கு அளவுக்கதிகமான வட்டி வசூலிக்கப்பட்டதால் இதனால் வட்டி செலுத்த முடியாமல் சிலர் மன உளைச்சலில் மரணம் வரை சென்றதால் இந்த எச்சரிக்கையை வாடிக்கையாளர்களுக்கு எஸ்பிஐ வழங்கியது.

இந்நிலையில், எஸ்பிஐ தனது ட்விட்டர் மூலம் வாடிக்கையாளர்களை எச்சரித்துள்ளது. அதில், யுபிஐ பரிவர்த்தனை உங்களால் செய்யப்படாமல் பணத்தை டெபிட் செய்வதற்கான எஸ்எம்எஸ் கிடைத்தால், முதலில் யுபிஐ சேவையை நிறுத்துங்கள், யுபிஐ சேவையை மூடுவது குறித்து வங்கி தகவல்களை அளித்துள்ளது.


UPI சேவையை எவ்வாறு முடக்கலாம்:

யுபிஐ சேவையை நிறுத்த எஸ்பிஐ வங்கி சில குறிப்புகளை வழங்கியுள்ளது. அதில்  கட்டணமில்லா ஹெல்ப்லைன் எண் 1800111109 ஐ அழைப்பதன் மூலம் வாடிக்கையாளர்கள் யுபிஐ சேவையை நிறுத்தலாம். அல்லது ஐவிஆர் எண்ணை 1800-425-3800 / 1800-11-2211 என்ற தொலைபேசி எண்ணிலும் அழைக்கலாம்.

இது தவிர, https://cms.onlinesbi.sbi.com/cms/ என்ற முகவரியில் உங்கள் புகாரை பதிவு செய்யலாம். அங்கேயே 9223008333 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பலாம் என தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்