ரிஹானாவின் நாடாகிய பர்படாஸுக்கு இந்தியாவால் அனுப்பப்பட்ட நன்கொடை – நன்றி தெரிவித்த பர்படாஸ் பிரதமர்!
பாப் பாடகி ரிஹானா விவசாயிகளின் போராட்டத்திற்கு தெரிவித்த கருத்துக்கு இந்தியாவில் எதிர்ப்பு இருந்தாலும், கொரோனா தடுப்பு ஊசி கேட்டு ரிஹானாவின் நட்டு பிரதமர் அவர்கள் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க ஒரு லட்சம் கோவிஷீல்டு கொரோனா தடுப்பு ஊசிகளை இந்தியா நன்கொடையாக அனுப்பியுள்ளது.
கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக மத்திய அரசால் கொண்டு வரப்பட்டுள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் எல்லையில் பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக பாப் பாடகி ரிஹானா அவர்கள் கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு பல தரப்பில் இருந்தும் இந்தியாவில் இவருக்கு எதிர்ப்புகள் கிளம்பியது. ரிஹானாவின் செயல்கள் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவது போல தெரிவதாக பலர் கருத்து தெரிவித்து வந்தாலும், ரிஹானாவின் நாடான பர்படாஸ் நாட்டு பிரதமர் மியா அமோர் மோட்லி அவர்கள் இந்தியாவிடம் கொரோனா தடுப்பூசி கேட்டு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது ஒருபுறம் ரிஹானாவின் கருத்துக்கள் மீது வெறுப்பு இருந்தாலும் இந்தியா மனிதாபிமானத்துடன் ஒரு லட்சம் கோவிஷீல்ட் கொரோனா தடுப்பூசிகளை பர்படாஸ் நாட்டுக்கு அனுப்பி வைத்துள்ளது. இந்தியாவின் மனிதாபிமானமுள்ள இந்த செயல் உலக நாடுகளிடம் வரவேற்பு பெற்றுள்ள நிலையில், பிரதமர் மோடி அவர்களுக்கு பர்படாஸ் பிரதமர் மோட்லி அவர்கள் நன்றி தெரிவித்து கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அதில் கோவிஷீல்ட் தடுப்பூசிகளை தங்கள் நாட்டிற்கு தாராளமாக நன்கொடையாக அளித்ததற்காக பிரதமர் மோடிக்கும், இந்திய அரசுக்கும், இந்திய மக்களுக்கும், எனது நாட்டு மக்கள் சார்பாகவும், என் சார்பாகவும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என கூறியுள்ளார்.