இந்தியாவுக்கு வந்தது ஜாக் மா மற்றும் அலிபாபா ஃபவுண்டேஷன்ஸ் நன்கொடை அளித்த மருத்துவ உபகரணங்கள்

Default Image

கொரோனா வைரஸ் இந்தியாவில் தற்போது அதிவேகமாக பரவி வருகிறது.இந்த வைரசால் இந்தியாவில் இதுவரை 1000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். கொரோனாவை கட்டுப்படுத்த பிரதமர் மோடி 21 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தார்.இதனால் பல்வேறு தொழில் முடங்கியுள்ளது.

எனவே பிரதமர் மோடி கொரோனா தடுப்பு பணிக்கு தங்களால் இயன்ற நிதியுதவி அளியுங்கள் என பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.வேண்டுகோளை ஏற்று பலரும் நிதி உதவி அளித்து வருகின்றனர்.

இதன் ஒருபகுதியாக இந்தியாவிற்கு சீனாவை சேர்ந்த பல தொண்டு நிறுவனங்கள் உதவி செய்து வருகின்றனர்.இந்நிலையில்  இரண்டாவது முறையாக சீன தொண்டு நிறுவனங்களான ஜாக்மா மற்றும் அலிபாபாவிடம்  இருந்து மருத்துவ உபகரணங்கள் ,மாஸ்க் , வென்டிலேட்டர்களும் டெல்லியில் வந்து இறங்கி உள்ளது என்று  சீன தூதர் சன் வெய்டாங் (Sun Weidong)தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.இதனை டெல்லியில் உள்ள இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி (Indian Red Cross Society) பெற்றுக் கொண்டது என்றும் தெரிவித்துள்ளார். 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்