அமெரிக்காவில் நடைபெறும் போராட்டம்.. ஆதரவு தெரிவிக்கும் அதிபர் டிரம்பின் மகள்!

அமெரிக்காவில் ஜார்ச் பிளாயீடு என்பவரின் கழுத்தில் காவலர் முட்டியை வைத்து அழுத்தி கொலை செய்த வழக்கில் பொதுமக்கள் தங்களின் ஆதரவை தெரிவித்து வரும் நிலையில், அதிபர் டிரம்பின் மகழும் தனது ஆதரவை தெரிவித்து வந்தார்.
அமெரிக்காவில் மின்னபோலிஸ் நகரில் காவல் அதிகாரி ஒருவர் கருப்பினத்தை சேர்ந்த ஜார்ச் பிளாயீடு என்பவரின் கழுத்தில் முட்டியை வைத்து அழுத்தியதால், அவர் உயிரிழந்தார். இதனை கண்டித்து, கடந்த சில நாட்களாக அமெரிக்காவில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. மேலும், அந்த போராட்டத்தில் காவலர்களும் ஆதரவு தெரிவித்தனர்.
அதுமட்டுமின்றி, பல பிரபலங்கள் தங்களது ஆதரவை தெரிவித்து வரும் நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்பின் மகள் டிஃப்பனி டிரம்ப் தனது ஆதரவை தெரிவித்தார். இதுகுறித்து தனது ஒன்ஸ்டாக்ராம் பக்கத்தில் அவர் ஒரு பதிவை பதிவிட்டார். அதில் ஒரு கருப்பு புகைப்படத்தை பதிவிட்டு, “தனியாக செயல்பட்டால் சிறிதே சாதிக்க முடியும். இணைந்து செயல்பட்டால் அதிகம் சாதிக்கலாம்” என பதிவிட்டார்.