உள்நாட்டு விமானம் – ரூ.3,500 முதல் ரூ.10,000 வரை கட்டணம் நிர்ணயம்.!

Default Image

உள்நாட்டு விமான சேவை கட்டணம் குறைந்தபட்சம் ரூ.3,500 லிருந்து அதிகபட்சம் ரூ.10,000 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் நான்காவது கட்ட பொதுமுடக்கம் மே 31 ஆம் தேதி வரை அமலில் இருக்கும் நிலையில், வருகின்ற 25 ஆம் தேதி முதல் உள்நாட்டு விமான சேவை தொடங்கும் என விமான போக்குவரத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி அறிவித்திருந்தார். இதன் காரணமாக அனைத்து விமான நிலையங்களும் தயார் நிலையில் இருக்குமாறு தெரிவிக்கப்பட்டது. இதனால் உள்நாட்டு விமான சேவைக்கான முன்பதிவு இன்று காலை முதல் தொடங்கியுள்ளது. 

இதையயடுத்து, விமானத்தில் பயணிக்கும் பயணிகளுக்குப் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டது. அதில், விமான நிலையத்திற்குள் வரும்போது உடல் வெப்ப நிலையை அளவிடும் தெர்மல் ஸ்கிரீனிங் பகுதி வழியாக பயணிகள் வர வேண்டும் என்றும் பயண நேரத்திற்கு 2 மணி நேரத்திற்கு முன்பாக விமான நிலையத்திற்கு வர வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும், 14 வயதுக்கு கீழ் உள்ளவர்களை தவிர மற்ற அனைவரும் செல்போனில் கட்டாயம் ஆரோக்கிய சேது செயலியை வைத்திருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், உள்நாட்டு விமான சேவை கட்டணம் குறைந்தபட்சம் ரூ.3,500 லிருந்து அதிகபட்சம் ரூ.10,000 வரை நிர்ணயம் செய்துள்ளது. மேலும் டெல்லியில் இருந்து மும்பை செல்ல சராசரி கட்டணம் கிட்டத்தட்ட ரூ.6,700 ஆக நிர்ணயம் செய்யப்படுகிறது என்று மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். நிர்ணயிக்கப்பட்ட அளவில் ஆகஸ்ட் 24 வரை உள்நாட்டு விமான கட்டணங்களை வசூலிக்க அனுமதிக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார். விமான கட்டணங்கள் மிகவும் அதிகரிக்க கூடாது என்பதால் அரசு கட்டணம் நிர்ணயம் செய்கிறது என்று தெரிவித்துள்ளார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்