உத்திரப்பிரதேசத்தில் உள்ள மருத்துவமனையில் பலியான சிறுமியின் உடலை நாய் நக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதை தொடர்ந்து மருத்துவமனையில் இருந்து 2 ஊழியர்கள் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளனர.
உத்திரப்பிரதேசத்தின் சம்பால் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் விபத்தில் பலியான 15வயது சிறுமியின் உடலை நாய் நக்குவது போன்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.அந்த மருத்துவமனையின் மேல் மாடியில் பலியான சிறுமியின் உடலை நாய் நக்கும் வீடியோ வியாழக்கிழமை அன்று சமூக ஊடகங்களில் பரவியதை தொடர்ந்து,அந்த மருத்துவமனையின் தலைமை மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் சுஷில் வர்மா இந்த வழக்கு மிகவும் தீவிரமானது என்று கூறியதுடன் ,இது தொடர்பாக வார்ட்பாய் மற்றும் ஒரு துப்புரவாளர் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார் .
அதனுடன் இந்த வழக்கு தொடர்பாக மருத்துமனையின் மருத்துவரிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாகவும் சுஷில் அறிவித்தார் .மேலும் இது குறித்து விசாரிக்க விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் , அனைத்து குற்றவாளிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.விபத்தின் போது சம்பவ இடத்திலேயே பலியான சிறுமியின் தந்தை செய்தியாளர்களிடம் கூறிய போது , மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை என்று குற்றம்சாட்டி உள்ளார் . சிறுமியின் தந்தை அம்ரோஹா மாவட்டத்தில் வசிக்கும் சரண் சிங் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : நடிகர் அஜித் குமார் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' திரைப்படத்தின் டீசர் பிப்ரவரி 28, 2025 அன்று வெளியாகும்…
சென்னை : முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று காலை தனது முகநூல் பக்கத்தில் தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்கிற முறையில், 2026-ஆம் ஆண்டு…
டெல்லி : இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி 1984 ஆம் ஆண்டு, அக்டோபர் 31 அன்று தனது சீக்கிய…
ராவல்பிண்டி : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபியின் 7-வது போட்டி இன்று ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவிருந்தது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா…
துபாய் : கடந்த பிப்ரவரி 23-ஆம் தேதி நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் அணியும், இந்திய கிரிக்கெட் அணியும் மோதியது.…
சேலம் : பாமக கௌரவ தலைவரும், பாமக சட்டமன்ற குழுத் தலைவருமான ஜி.கே.மணியின் இல்ல திருமண விழா நாளை காலை…