நாயுடன் செல்பி எடுக்க முயன்ற பெண்ணை நாற்பது தையல் போட வைத்த சம்பவம்.. வைரலாகும் செய்தி.. வாயை பஞ்சராக்கிய பயங்கரம்…
- செல்பி மோகத்தால் நிகழ்த சோகம்.
- நாய் கடித்து நாற்பது தையல் போட்ட சம்பவம்.
தற்போதைய இளைஞர்கள் செல்ல பிராணி வளர்ப்பில் பெரிதும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதில், இந்த செல்ல பிராணிகளால் பல்வேறு இன்னல்களுக்கும் ஆளாகி வருகின்றனர். இந்நிலையில் அர்ஜென்டினாவில் இதுபோன்ற சம்பவம் தற்போது நடைபெற்றுள்ளது. அர்ஜென்டினா நாட்டை சேர்ந்த லாரா ஜான்சன் என்ற 17 வயது நிரம்பிய இளம்பெண் ஒருவர் தனது தோழிக்கு சொந்தமான ஜெர்மன் ஷெப்பர்ட் ரக நாயுடன் செல்ஃபி எடுக்க முயன்றுள்ளார்.
அப்போது எதிர்பாராத விதமாக அந்த நாய் அவரது முகத்தில் கொடூரமாக கடித்து விட்டது. இதில் படுகாயமடைந்த அவருக்கு அருகில் உள்ள மருத்துவமனையில் ஊசி நரம்பு கொண்டு சுமார் 40 தையல் போடப்பட்டுள்ளது. எனவே இந்த விவகாரம் செல்லபிராணி வளர்க்கும் அனைவருக்கும் ஒரு அதிர்ச்சியையும் ஒரு எச்சரிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது.