Google pay செயலிக்கு ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளதா? விளக்கமளித்த Google pay!

Default Image

இந்தியாவில் பலகோடி மக்கள், தங்களின் அன்றாட பணப்பரிவர்த்தனை தேவைகளுக்காக கூகுள் பே செயலியை பயன்படுத்தி வருகின்றனர். இந்த செயலி மூலம் ஒரு நபரிடமிருந்து மற்றொரு நபருக்கு பணப்பரிவர்த்தனை செலுத்தலாம். அதுமட்டுமின்றி, பணமும் பெற்று கொள்ளலாம். அவ்வாறு வரும் பணம், நேரடியாக உங்களின் வங்கி கணக்குக்கு செல்லும

இந்நிலையில், இந்த செயலிக்கு மத்திய அரசின் வணிக சட்டங்களுக்கு உட்பட்டு செயல்படவில்லை எனவும், பணப்பரிமாற்றம் செய்வோரின் வங்கிக் கணக்குகளுக்கு பாதுகாப்பு இல்லை எனவும், ரிசர்வ் வங்கியின் அனுமதி பெறவில்லை போன்ற குற்றச்சாட்டுகளை தொடர்ந்து முன்வைத்துவந்தனர்.

இதன்காரணமாக, கூகுள் பே செயலியால் ஏற்பட்ட குற்றச்சாற்றுகள் குறித்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ரிசர்வ் வங்கி தரப்பில், கூகுள் பே செயலி எந்த ஒரு பணப்பரிமாற்ற அமைப்பையும் கொண்டிருக்கவில்லை. அதற்கு மாறாக, இது மூன்றாம் தரப்பு பணப்பரிமாற்ற செயலியே (third party money transfer app) என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து விளக்கமளித்த கூகுள் பே நிறுவனம், கூகுள் பே செயலியுடன் ஒப்பந்தம் மேற்கொண்டிருக்கும் வங்கிகளுக்கு இடையே மட்டுமே பணப்பரிமாற்றம் செய்வதாகவும், அவ்வாறு பணப்பரிமாற்றம் செய்வதற்கு தொழில்நுட்ப ரீதியாக உதவுவதாகவும், அதற்கு அனுமதி பெற தேவையில்லை என விளக்கமளித்து.

மேலும், கூகுள் பே செயலி, பணப்பரிமாற்றம் செய்வதற்கு பாதுகாப்பான செயலி எனவும், அதற்க்கு ரிசர்வ் வங்கி எந்த தடையும் விதிக்கவில்லையெனவும் தெரிவித்தனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்