கொரோனாவுக்கு பிளாஸ்மா சிகிச்சை உதவுகிறதா? – ஆய்வில் இறங்கிய ஐ.சி.எம்.ஆர்.!

Default Image

பிளாஸ்மா சிகிச்சை உதவுகிறதா இல்லையா என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருவதாக ஐ.சி.எம்.ஆர் தெரிவித்துள்ளது.

சார்ஸ், எபோலா போன்ற வைரஸ் நோய்கள் உலகில் பரவிய போது பல நாடுகளும் பிளாஸ்மா சிகிச்சை முறையை கடைபிடித்தனர். அதில் வெற்றியும் கண்டனர். பிளாஸ்மா சிகிச்சை என்பது வைரஸ் நோய் தாக்கியவர்களிடம் இருந்து பெறப்படும் எதிர்ப்பு அணுக்கள் சிகிச்சை முறையாகும். கொரோனாவில் இருந்து குணம் அடைந்தவர்களின் ரத்தத்தில் உள்ள பிலிம்போ சைட் செல்களில் ஒருவித நோய் எதிர்ப்பு சக்தி திரவம் சுரக்கும். அந்த திரவத்தை தனியாக பிரித்து எடுத்தால் மிகச்சிறந்த நோய் எதிர்ப்பு சக்தி தரும் அணுக்கள் கிடைக்கும்.

இந்த பிளாஸ்மா சிகிச்சையை இந்தியாவில் நடைமுறைப்படுத்தலாம் என்று ஐசிஎம்ஆர் தெரிவித்திருந்தது. பின்னர் கொரோனா வைரஸ் உயிரிழப்புகள் குறைய பிளாஸ்மா சகிச்சை உதவவில்லை என்றும்  இந்திய மருத்தவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. இருப்பினும், டெல்லி, தமிழ்நாடு ஆகியவற்றில் உள்ள மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சை தொடரும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், பிளாஸ்மா சிகிச்சை உதவுகிறதா இல்லையா என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருவதாக ஐ.சி.எம்.ஆர் தெரிவித்துள்ளது.

இதனிடையே இந்தியாவில் 3 கொரோனா தடுப்பூசிகள் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு வருவதாக கூறியுள்ள ஐசிஎம்ஆர், சைடஸ் காடிலா, பாரத் பயோடெக் போன்ற நிறுவனங்கள் முதல் கட்ட சோதனைகளை முடித்துள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும், சீரம் நிறுவனம் 2ம் கட்ட சோதனைகளை நிறைவு செய்துள்ளதாகவும், அனுமதி பெற்ற பிறகு, நாட்டில் உள்ள 14 இடங்களில், ஆயிரத்து 500 நோயாகளிகளுக்கு 3 ஆம் கட்ட பரிசோதனை நடத்தப்படும் எனவும் ஐ.சி.எம்.ஆர் விளக்கம் அளித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்