மோடி வேண்டாம். எச்சரித்த சிவசேனா….கலக்கத்தில் பிஜேபி…!!
மீண்டும் மோடிதான் பிரதமர் வேட்பாளர் என்றால் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று சிவசேனா கூறியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜகவுடன் சிவசேனா கட்சி கூட்டணி வைத்து ஆட்சி செய்கின்றது சிவசேனா .இந்த நிலையில் சமீப காலமாக சிவசேனா கட்சி, பாஜக-வை விமர்சித்து வருகிறது. குறிப்பாக ரபேல் ஊழல் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை கேட்டு பாஜகவுக்கு நெருக்கடி கொடுத்தது அனைவருக்கும் தெரியும்.
இந்நிலையில் பாராளுமன்ற தேர்தல் வர இருப்பதால் சிவசேனா கட்சி சில நிபந்தனைகளை பாஜகவிற்கு விதித்துள்ளது.இன்று மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய சிவசேனா கட்சியை சேர்ந்த சஞ்சய் ராவத், பாஜக கூட்டணியில் இருந்து சிவசேனா கட்சி இன்னும் விலகவில்லை. மேலும் வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் பாஜக மூத்த தலைவர் நிதின் கட்கரியை பிரதமர் வேட்பாளாராக அறிவித்தால் பாஜகவை ஆதரிக்க தயங்க மாட்டோம் என்று கூறியுள்ளார்.
பாரதீய ஜனதா கட்சியில் பிரதமர் வேட்பாளர் மீண்டும் மோடிதான் என்று சொல்லி வரும் நிலையில் சிவசேனா_வின் இந்த கருத்தால் பாஜக பீதியடைந்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.