ஆவணப்பட விவகாரத்தில் பிபிசியை தடை செய்ய கோரிய பொதுநல மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
2002 குஜராத் கலவரம் மற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் பங்கு பற்றிய ஆவணப்படம் தொடர்பாக பிபிசியை முழுமையாக தடை செய்யக் கோரி தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்தியாவில் பிபிசி சேனல் செயல்பாடுகளை தடை செய்யக் கோரி இந்து சேனா தலைவர் விஷ்ணு குப்தா உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அவர் தாக்கல் செய்த மனுவில், “பிபிசி நிறுவனம், இந்தியாவிற்கும், இந்திய அரசாங்கத்திற்கும் எதிராக ஒரு சார்புடையது என்றும் பிபிசி ஆவணப்படமான ‘இந்தியா: மோடி கேள்வி’ இந்தியா மற்றும் பிரதமர் மோடியின் உலகளாவிய எழுச்சிக்கு எதிரான ஆழமான சதியின் விளைவு” என்றும் குற்றம் சாட்டினார். இதனையடுத்து நீதிபதி சஞ்சீவ் கண்ணா, உங்கள் கருத்து முற்றிலும் தவறானது என்றும் பிபிசியை தடை செய்யுமாறு நீதிமன்றத்தை நீங்கள் எப்படிக் கேட்க முடியும்?”என்று கூறி அவரது மனுவை தள்ளுபடி செய்தார்.
குஜராத்தில் 2002-ல் நடந்த கலவரத்தில் அப்போது குஜராத் முதல்வராக பதவியில் இருந்த பிரதமர் மோடி குறித்து தவறாக சித்தரிக்கப்பட்டு இங்கிலாந்தை சேர்ந்த பி.பி.சி. செய்தி நிறுவனம் ஒரு ஆவண படத்தை தயாரித்து வெளியிட்டு இருந்தது. இந்த படத்தை மத்திய அரசு இந்தியாவில் வெளியிட தடை விதித்தது. ஆனால் தடையை மீறி நாட்டில் சில பல்கலைக்கழகங்களில் இப்படம் திரையிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில், தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட்…
புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…
"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால் பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…
சென்னை : z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…