இன்று சுநலத்திற்க்காக உழைக்கும் மருத்துவர்கள் மத்தியில், மக்களுக்காக உழைக்கும் மருத்துவர்களும் இருக்க தான் செய்கின்றனர். இந்நிலையில், குழந்தைகள் நல மருத்துவரான ரியான் கொய்ட்ஸீ, குழந்தைகளுக்கு இரத்தப் பரிசோதனை செய்ய இரத்தம் எடுக்கும்போது வலி ஏற்படாமல் இருக்க Nat King Cole’s classic என்ற பாடலை பாடி அசத்துகிறார்.
அவர் இந்த பாடலை பாடும் போது, அந்தக் குழந்தையும் எந்தவித சலனமுமின்றி மருத்துவரின் பாடலைக் கேட்டு ரசிக்கிறது. அவரும் தேவையான இரத்தத்தை எடுத்துகொள்கிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், “ இப்படி பாட்டு பாடுவது வாடிக்கையாக நான் செய்வதுதான். அது காண்போருக்கு வேடிக்கையாக இருக்கலாம். ஆனால் குழந்தைகள் அதனால் சிரிப்பார்கள், ரசிப்பார்கள். இது என்னுடைய மருத்துவ முறை என்று கூறியுள்ளார். இதில் ஒரு ஆச்சர்யமான விடயம் என்னவென்றால், அவர் மருத்துவம் மட்டுமல்லாமல் முறையான கிளாசிக்கல் மியூசிக்கும் கற்றறிந்துள்ளார் என்பது தான்.
மேலும், இந்த வீடியோவை குழந்தையின் தாய் கிரேஸி என்பவர்தான் ஃபேஸ்புக்கில் பகிர்ந்துள்ளார். அதில் “ இதற்கு முன் இப்படியான மருத்துவரைச் சந்தித்ததே இல்லை. காணும் யாரையும் சிரிப்புடனே வரவேற்கிறார். சிரித்த முகத்தோடு உற்சாகமாக அவர் இருப்பதே நேர்மறையான எண்ணத்தை உருவாக்குகிறது. என்னுடய நாளை அவர்தான் சிறப்பாக்கியுள்ளார். என் மகள் இரத்தம் எடுத்தபோது எந்தவித உணர்வுகளையும் வெளிப்படுத்தாமல் எப்போதும் போல் விளையாடினாள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதனை பார்த்த சமூக வலைதளவாசிகள், இதுபோன்ற மருத்துவர்கள் இன்னும் பலர் வரவேண்டும் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் , பஞ்சாப் கிங்ஸ் அணியும் விளையாடின. இதில்…
லக்னோ : இன்று ஐபிஎல் 2025 போட்டியில் இன்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும்…
லக்னோ : இன்று (ஏப்ரல் 1) நடைபெறும் ஐபிஎல் 2025 சீசனின் 13வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ்…
சென்னை : தமிழ் சினிமாவில் கமர்சியல் படங்கள் மூலம் எடுத்து ஹிட் கொடுத்து சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் இயக்குனர்…
லக்னோ : தேசிய கல்வி கொள்கை 2020-ல் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய கோட்பாடுகளில் ஒன்று மும்மொழி கொள்கை. இந்த மும்மொழி கொள்கை…
கேரளா : மலையாள நடிகர் மோகன்லாலின் ''எம்புரான்'' படம் ஒரு புறம் வசூல் சாதனை செய்தாலும், மறுபுறம் சர்ச்சைகளால் சூழந்துள்ளது.…