இந்தியாவிலேயே முதன்முறையாக கர்நாடகாவில் கொரோனா நோயாளி ஒருவரை தோல் பூஞ்சை நோய் தாக்கியுள்ளது மருத்துவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் பலர் தினமும் உயிரிழந்து வரும் நிலையில், கொரோனாவில் இருந்து மீண்டவர்களுக்கு மிகப் பெரும் சவாலாக தற்போது கருப்பு பூஞ்சை நோய் பரவி வருகிறது. அது மட்டுமல்லாமல், வெள்ளை மற்றும் மஞ்சள் பூஞ்சை நோயும் பரவி வருகிறது. இவற்றின் தாக்கங்களே இன்னும் குறையாத நிலையில் தற்பொழுது கொரோனா நோயாளி ஒருவரை இந்தியாவிலேயே முதன்முறையாக தோல் பூஞ்சை நோய் தாக்கியிருப்பது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள சித்ரதுர்கா மாவட்டம் சிக்கலாபுரா கிராமத்தை சேர்ந்த 50 வயது நபரொருவர் கடந்த சில நாட்களுக்கு முன்பதாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சித்ரதுர்காவில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்பொழுது அவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டதையடுத்து அந்த மருத்துவமனையிலேயே அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது.
இதனை அடுத்து தற்போது அவர் கொரோனாவில் இருந்து குணமடைந்த நிலையில் அவரது காது பகுதியில் பூஞ்சை உருவாகி இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர். இதனை அடுத்து இது குறித்து மருத்துவர்கள் மேற்கொண்ட பரிசோதனைகளில் தோல் பூஞ்சை நோய் தாக்கியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தோல் பூஞ்சை நோய் அறுவை சிகிச்சை மூலம் குணப்படுத்தி விடலாம் எனவும், இது மற்ற பூஞ்சைகளை போல ஒருவரிடமிருந்து ஒருவருக்கு பரவாது எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த தோல் பூஞ்சை தாக்கிய நபரை மருத்துவர்கள் சிகிச்சைக்காக மைசூரில் உள்ள அரசு காது, மூக்கு பிரிவு சிறப்பு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஏற்கனவே கருப்பு, மஞ்சள், வெள்ளை போன்ற பூஞ்சை தொற்றுகள் தாக்கமே இன்னும் குறையாத நிலையில் தற்பொழுது தோல் பூஞ்சை நோய் இந்தியாவில் முதன்முறையாக ஒருவருக்கு பரவியிருப்பது மருத்துவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…