பெண்ணின் வயிற்றிலிருந்து 24 கிலோ கட்டியை அகற்றிய மருத்துவர்கள்!

மேகாலயா மாநிலத்தில் வயிற்று வலியால் மகப்பேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண்ணின் வயிற்றிலிருந்து 24 கிலோ கட்டியை வெற்றிகரமாக அகற்றிய மருத்துவர்கள் முதல்வரிடம் பாராட்டு வாங்கியுள்ளனர்.
மேகாலயா மாநிலத்தில் கிழக்கு கரோ ஹில்ஸ் என்னும் மாவட்டத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் அடிவயிற்றில் அதிக அளவு வலி என 37 வயதான ஜார்ஜ் எனும் கிராமத்தை சேர்ந்த பெண் ஒருவர் கடந்த மாதம் 29ஆம் தேதியன்று மகப்பேறு மற்றும் குழந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் சுல்தான் கிட்டத்தட்ட மூன்று மணி நேர அறுவை சிகிச்சையில் இரண்டு மகப்பேறு மருத்துவர்கள் மற்றும் குழு பெண்ணுக்கு அறுவை சிகிச்சை முறையை மேற்கொண்டு உள்ளது.
ஆகஸ்ட் 3 அன்று அப்பெண் அறுவைசிக்குகிச்சைகள் முடிந்து மருத்துவமனை கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக பேசிய மருத்துவ கண்காணிப்பாளர் வயிற்றிலிருந்த கட்டி புற்றுநோயா என்பதை கண்டறிய பயாப்ஸிக்கு அனுப்பப்பட்டுள்ளது எனக் கூறியுள்ளார். விரைந்து பணியாற்றிய மருத்துவர்கள் மற்றும் குழுவுக்கு முதலமைச்சர் வாழ்த்துகளை கூறியுள்ளார். இதோ அந்த பதிவு,
A team of Doctors of the Tura District Maternity and Child Hospital (DMCH) successfully removed a 24kg Tumour from the abdomen of a patient from East Garo Hills.
I congratulate Dr. Vince Momin and the Team for the successful operation and I wish the patient a speedy recovery. pic.twitter.com/YKSTPgR0lG
— Conrad Sangma (@SangmaConrad) August 5, 2020