Breaking News : நாடுமுழுவதும் மருத்துவர்கள் 17ம் தேதி ஸ்ட்ரைக்
கொல்கத்தாவில் அரசு மருத்துவர் தாக்கப்பட்டதை கண்டித்து நாடு முழுவதும் மருத்துவர்கள் 17 ம் தேதி வேலைநிறுத்தம் செய்கின்றனர்.
இது தொடர்பாக இந்திய மருத்துவர் சங்கம் வெளியிட்ட அறிவிப்பில்,அத்தியாவசிய சேவை பணியில் இல்லாத மருத்துவர்கள் நாள் முழுவதும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவார்கள் என்றும் , இந்த வேலை நிறுத்தத்தில் தனியார் மற்றும் அரசு மருத்துவர்கள் அனைவரும் ஈடுபடுகின்றனர்.
இதனிடையில் வரும் 15,16 -ஆம் தேதிகளில் கருப்பு பட்டை அணிந்து பணியாற்றவும், தர்ணா மற்றும் அமைதி பேரணி நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது .போராட்ட்டம் நடைபெறும் நேரங்களில் அவசரகால சிகிச்சை தொடர்ந்து இயங்கும் என்று இந்திய மருத்துவர் சங்கம் தெரிவித்துள்ளது.