இன்று இந்தியா முழுவதும் உள்ள மருத்துவர்கள் இன்று வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேற்குவங்கம் மாநிலம் கொல்கத்தாவில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனை ஒன்றில் நோயாளி ஒருவர் அனுமதிக்கப்பட்டார்.ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி சில நாட்களுக்கு முன்னர் உயிரிழந்தார்.
இதனால் ஆத்திரமடைந்த இறந்தவரின் உறவினர்கள் அங்கு இருந்த இளநிலை மருத்துவர்கள் இருவரை சரமாரியாக தாக்கினார்கள்.இதில் மருத்துவர்கள் இருவரும் படுகாயம் அடைந்தனர்.
இதனையடுத்து அரசு மருத்துவமனையில் மருத்துவர்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்யக்கோரி இளநிலை மருத்துவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர்.
இதன் பின்னர் செய்தியாளர்களை இளநிலை மருத்துவர்கள் கூட்டமைப்பின் செய்தி தொடர்பாளர் அரிந்தம் தத்தா சந்தித்தார்.அப்போது அவர் கூறுகையில்,எங்களது கோரிக்கைகளை ஏற்கும் வரை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று தெரிவித்தார்.
இந்த விவகாரத்தில் இந்திய மருத்துவர் சங்கம் வெளியிட்ட அறிவிப்பில்,இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இன்று ( 17 ஆம் தேதி) நாடு தழுவிய வேலைநிறுத்தம் நடைபெறும்.இந்த வேலை நிறுத்தத்தில் தனியார் மற்றும் அரசு மருத்துவர்கள் அனைவரும் ஈடுபடுகின்றனர் என்று தெரிவித்தது.
அதன்படி இன்று காலை முதல் மருத்துவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவசர சிகிச்சை தவிர பிற சிகிச்சைகள் எதுவும் வழங்கப்படாது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…
மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த நிலையில்,…
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…