டிரைவராக மாறிய டாக்டர்.. கொரோனாவால் உயிரிழந்த நபரின் உடலை எடுத்துச் செல்ல மறுத்த ட்ரைவர்!

தெலுங்கானா மாநிலத்தில் கொரோனாவால் உயிரிழந்த நபரின் உடலை கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் வராத காரணத்தினால், மருத்துவர் ஒருவர் அவரின் உடலை டிராக்டரில் எடுத்து சென்றார்.
தெலுங்கானா மாநிலம், தெனுகுவாடாவைச் சேர்ந்த 43 வயது நபர் ஒருவர், கொரோனா நோய் தோற்றால் உயிரிழந்தார். அவரின் உடலை அடக்கம் செய்வதற்காக கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் கிடைக்கவில்லை. அதன்காரணமாக, அவரின் உடலை அடக்கத்திற்கு எடுத்து செல்வதற்காக ஒரு டிராக்டர் ஏற்பாடு செய்யுமாறு மருத்துவமனை நிர்வாகம் நகராட்சி அதிகாரிகளிடம் கோரியது.
டிராக்டரை மருத்துவமனைக்கு கொண்டு வந்த நகராட்சி ஊழியர், டிராக்டரை தனிமை வார்டுக்கு அருகில் நிறுத்தி, உடலை எடுக்க மறுத்து, அங்கிருந்து வெளியேறினார். ஒரு மணி நேரத்திற்குப் பிறகும் யாரும் டிராக்டரை ஓட்ட முன்வராத காரணத்தில், அங்குள்ள மருத்துவர் ஸ்ரீராம், பிபிஇ பாதுகாப்பு உடை அணிந்து, அந்த டிராக்டரில் உயிரிழந்தவரின் உடலை கொண்டு சென்றார்.
அந்த நபரின் இறுதி சடங்குகள் முடியும் வரை, மருத்துவர் அங்கேயே காத்திருந்தார். மருத்துவரின் இந்த செயலுக்கு மக்கள் பலரும் அவரை பாராட்டினார்கள். மேலும் அதுதொடர்பான புகைப்படங்கள் மற்றும் விடீயோக்கள், சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
KKR vs SRH : ஹைதராபாத்தின் மிரட்டல் பந்துவீச்சு! இறுதியில் பொளந்து கட்டிய கொல்கத்தா! டார்கெட் 201!
April 3, 2025
அமெரிக்க வரி விவகாரம் : “மத்திய அரசு என்ன செய்யப் போகிறது?” ராகுல் காந்தி சரமாரி கேள்வி!
April 3, 2025
“பாஜகவால் அதிகம் பாதிக்கப்பட்டது நானும், கேரள முதலமைச்சரும் தான்.!” மு.க.ஸ்டாலின் பேச்சு!
April 3, 2025