ஆந்திர மாநிலம் ஹைதிராபாத், கொல்லப்பூரில் உள்ள கால்நடை மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வந்தவர் பிரியங்கா ரெட்டி. இவரது உடல் நேற்று காலை எரித்து கொல்லப்பட்ட நிலையில் பெங்களூரு – ஹைதிராபாத் நெடுஞ்சாலையில் கண்டெக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இந்தியாவே அதிர்ச்சிக்குள்ளகியுள்ளது.
டாக்டர் பிரியங்கா ரெட்டி, நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல தன்னுடைய பணிகளை முடித்துவிட்டு, தனது இரு சக்கர வாகனத்தில் வழக்கம் போல வந்து கொண்டிருந்தார். அப்போது அவருடைய வண்டி பஞ்சராகியுள்ளது. உடனே அவர், தன்னுடைய வீட்டிற்கு போன் செய்து பஞ்சரானதை கூறியுள்ளார். மேலும், அங்குள்ள ஒரு லாரி ஓட்டுநர் உதவி செய்வதாக கூறியுள்ளார்.
இதற்கடுத்து இரவு 9 மணிக்கு போன் செய்து, தான் ஒரு டோல்கேட் அருகில் இருப்பதாக கூறினார். மேலும் தனக்கு பதட்டமாக இருப்பதாக கூறினார்.இதற்கடுத்து அவரது போன் சுவிட்ச் ஆப் ஆகியுள்ளது. அதனை அடுத்து பதறிய உறவினர்கள், ப்ரியங்கா ரெட்டியை தேடி அவர் குறிப்பிட்ட டோல்கேட்டிற்கு சென்று பார்த்தனர். ஆனால், அவர், அங்கு இல்லை. உடனே காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இதனை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார், காணாமல் போயிருந்த பிரியங்காவை தேடி வந்தனர்.
அந்த சமயம் ஹைதிராபாத் – பெங்களூரு சாலையில் ஒரு பாலத்தில் அடியில் எரித்து கொல்லப்பட்ட நிலையில் ஒரு சடலம் இருப்பதை அங்குள்ள ஒரு பால்காரர் பார்த்து காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். பின்னர் சம்பவ இடத்திற்க்கு வந்த போலீசார், உடலை கைப்பற்றினர்.
பின்னர் பிரியங்கா ரெட்டி குடும்பத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவரது சகோதரி, ப்ரியங்கா அணிந்திருந்த செயின் போன்ற பொருட்களை வைத்து அடையாளம் கண்டறிந்தார். பின்னர், எரித்து கொல்லப்பட்டது டாக்டர் ப்ரியங்கா ரெட்டி தான் என்பதை உறுதி செய்து, இந்த சாவிற்க்கு காரணமானவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…