கோவிஷீல்ட் தடுப்பூசி,டெல்டா வகை கொரோனா வைரஸுக்கு எதிராக 61% பயனுள்ளதா? – டாக்டர் என்.கே. அரோரா…!

கோவிஷீல்ட் தடுப்பூசி டெல்டா வகை கொரோனா வைரஸுக்கு எதிராக 61% பயனுள்ளதாக இருக்கிறது என்று டாக்டர் என்.கே. அரோரா தெரிவித்துள்ளார்.
சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா (எஸ்ஐஐ) தயாரித்த கோவிஷீல்ட் தடுப்பூசி டெல்டா வகை கொரோனா வைரஸுக்கு எதிராக 61% பயனுள்ளதாக இருக்கும் என்று கோவிட் பணிக்குழுவின் தலைவர் டாக்டர் என்.கே. அரோரா நேற்று தெரிவித்தார்.
மேலும்,இதுகுறித்து டாக்டர் என்.கே.அரோரா கூறியதாவது:
கிறிஸ்டியன் மெடிக்கல் கல்லூரி வேலூர் நடத்திய ஆய்வில்,டெல்டா வகை கொரோனா வைரஸுக்கு எதிராக கோவிஷீல்ட்டின் ஒரு டோஸ் தடுப்பூசி 61 சதவீத செயல்திறனைக் கொண்டிருப்பதைக் காட்டியது,இது இரண்டு டோஸ் அளவுகளுடன் ஒப்பிடுகையில் 65 சதவீதமாக அதிகரித்தது.
இதற்கிடையில்,கோவிஷீல்டின் இரண்டு தடுப்பூசிகளுக்கான இடைவெளியானது நான்கு முதல் எட்டு வாரங்களாக இருக்க வேண்டுமா? என்பது குறித்து விவாதம் நடந்து வருகிறது.
இதற்காக,பகுதி மற்றும் முழு நோய்த்தடுப்பு மருந்துகளின் செயல்திறன் தொடர்பான சான்றுகள் மற்றும் அறிக்கைகளும் பரிசீலனையில் உள்ளன.
எனினும்,கோவிஷீல்டின் இரண்டு டோஸ் அளவுகளுக்கிடையேயான இடைவெளியை நான்கு முதல் ஆறு வாரங்களிலிருந்து,12 முதல் 16 வாரங்களாக அதிகரிக்கும் முடிவை மத்திய சுகாதார அமைச்சகம் மே 13 அன்று அறிவித்தது.
பின்னர்,மத்திய உள்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் கூறுகையில்,”இந்த இடைவெளியை அதிகரிப்பதற்கான முடிவு விஞ்ஞான தரவுகளின் அடிப்படையில் வெளிப்படையான முறையில் எடுக்கப்பட்டது”, என்று தெரிவித்தார்.
இதற்கிடையில்,ஏப்ரல் கடைசி வாரத்தில்,யுனைடெட் கிங்டமின் சுகாதாரத் துறையின் நிர்வாக நிறுவனமான பப்ளிக் ஹெல்த் இங்கிலாந்து வெளியிட்டுள்ள தகவல்களில்,கோவிஷீல்டின் இரண்டு டோஸ் அளவுகளுக்கிடையேயான இடைவெளி 12 வாரங்களாக இருக்கும்போது தடுப்பூசி செயல்திறன் 65 முதல் 88 சதவீதம் வரை வேறுபடுகிறது என்பதைக் காட்டுகிறது”,என்று கூறினார்.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : சீமான் விவகாரம் முதல்… மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டம் வரை.!
February 28, 2025
”என்னமோ நான் வயசுக்கு வந்த புள்ளைய கற்பழிச்சு விட்ட மாதிரி பேசுறீங்க ” – சீமான் சர்ச்சைப் பேச்சு.!
February 28, 2025
“நான்தான் சம்மனை கிழிக்கச் சொன்னேன், என்னை கைது செய்ய வேண்டியதுதானே” – சீமான் மனைவி கயல்விழி!
February 28, 2025