பெண்கள் உரிமை, பாலின சமத்துவம் உள்ளிட்ட பிரிவுகளில் ஆற்றிய சிறப்பான சேவைக்காக டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த பல்வேறு இன நடவடிக்கைக் குழு என்ற அமைப்பு, சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பல்வேறு துறைகளில் சிறப்பான சாதனை படைத்துடன், மக்களின் வாழ்வில் மாற்றம் ஏற்படுத்த வித்திட்ட 20 பெண்களுக்கு விருதுகளை அறிவித்திருந்தது. இந்த விழா அமெரிக்காவின் இல்லினாய்ஸில் நடைபெற்றது.
இந்த இருபது பெண்களின் பட்டியலில் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் இடம்பெற்றிருந்தார். பெண்கள் உரிமை, பாலின சமத்துவம் உள்ளிட்ட பிரிவுகளில் ஆற்றிய சிறப்பான சேவைக்காக டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு இவ்விருது வழங்கப்பட்டதாக நிகழ்ச்சியில் அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, புதுவையில் இருந்தவாறு காணொளி வாயிலாக பேசிய தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள், பெண்கள் முன்னேற்றத்திற்கான தனது பொறுப்பை இரட்டிப்பாக்கி உள்ளதாகவும், குடும்பத்திற்காகவும், சமூகத்திற்காகவும், நாட்டிற்காகவும் உழைக்கும் கோடிக்கணக்கான பெண்களுக்கு இந்த விருதை சமர்ப்பிப்பதாக தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா : அதிபரைத் தேர்வு செய்யும் தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில், தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றிபெற்று அமெரிக்காவின் அதிபரானார்.…
அரியலூர் : இன்று (நவம்பர் 6) புதன்கிழமை அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்டத்தின் வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு…
சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே,…
சூரசம்ஹாரம் தோன்றிய வரலாறு மற்றும் திருசெந்தூரில் சூரசம்ஹாரம் நடைபெறும் நேரம் என்ன என்பதை பற்றி இந்த செய்தி குறிப்பில் காணலாம்…
வாஷிங்டன் : நடைபெற்று முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப் 277 மாகாணங்களில்…
ஃப்ளோரிடா : அமெரிக்காவில் நடைபெற்று வந்த அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் 277 மாகாணங்களில் வெற்றி பெற்று 2-வது முறையாக…