வீட்டிலிருந்து பணிபுரிபவரா நீங்கள்..? இதை கடைபிடிக்க மறந்துவிடாதீர்கள்..!
இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவுவதால், மத்திய, மாநில அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக எடுத்து வருகிறது. நாடு முழுவதும் 21 நாட்களுக்கு 144 தடை வித்தித்து, ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிவோர் வீடுகளில் இருந்து பணிபுரிய அரசு வேண்டுகோள் விடுத்தது. அத்தியாவசிய சேவையை தவிர்த்து மற்ற அனைவரும் வீட்டில் இருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக வீட்டில் இருந்து வேலைப் பார்த்து வருபவர்கள் கீழே உள்ள வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.
வீட்டில் இருந்து பணிபுரிவோருக்கு வேண்டுகோள்:
- சரியான திட்டமிடலுடன் சரியான நேரத்தில் வேலைகளை செய்து முடிப்பது சிறந்ததாக இருக்கும்.
- இரவு முழுவதும் கண்முழித்து வேலை பார்த்துவிட்டு, காலை அதிக நேரம் தூங்குவதை தவிர்க்க வேண்டும்.
- வீட்டில் இருப்பதால் கண்ட நேரத்தில் நொறுக்குத் தீணிகளை அதிகளவு சாப்பிட கூடாது.
- ஆரோக்கியமான உணவுகள், ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை சரியான நேரத்தில் சாப்பிடுவது நல்லது.
- ஜிம் மூடப்பட்டுள்ளதால் உடற்பயிற்சி செய்வதை வீட்டில் தொடர்வது நல்லதாக இருக்கும்.
- முக்கியமாக வீட்டில் தானே இருக்கிறோம் என அலட்சியம் இல்லாமல் கைகளை அடிக்கடி கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். மேலும் எல்லாவற்றையும் விட வீட்டை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.