PMAY 2024 [file image]
PMAY: பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY) என்பது ஏழை மக்களுக்கு வீடுகளை வழங்குவதற்காக இந்திய அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட நலத் திட்டங்களில் ஒன்றாகும்.
இந்த திட்டத்தின் கீழ், இந்திய அரசு குடிசைப் பகுதிகளில் வீடுகள் கட்டுவதற்கு ஏதுவாக ஒரு வீட்டிற்கு ரூ.1 லட்சம் மானியமாக வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் வீட்டுக் கடனும் வாங்கப்படுகிறது.
வறுமைக் கோட்டின் கீழ் இருக்கும் மக்களுக்கு வீடுகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட ஒரு முயற்சியாகும். இதில் 6.5% வரை வட்டியுடன் மானியம் பெறலாம், மேலும் நீங்கள் வாங்கும் கடனை 20 ஆண்டுகளில் திருப்பிச் செலுத்தலாம்.
இப்பொழுது இந்த திட்டத்திற்கு தேவையான அணைத்து விவரங்களும் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்திற்கு விண்ணப்பித்து வீட்டுக் கடன் மானியத்தைப் பெறுவதற்கு 2024 டிசம்பர் 31ம் தேதி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க PMAY-ன் அதிகாரப்பூர்வ இணையதளமான https://pmaymis.gov.in/ என்ற இணையதளத்தில் சென்று விண்ணப்பிக்கவும்.
உள்ளே சென்றதும், நான்கு விருப்பங்கள் காட்டப்படலாம், உங்களுக்கான விருப்பத்தைத் தேர்வு செய்யவும். (ISSR) என்ற விருப்பத்தைத் தேர்வு செய்த பின்னர், உங்கள் ஆதார் எண் மற்றும் பெயர் பின்வரும் பக்கத்தில் கேட்கப்படும் அதனை உறுதி செய்யவும்.
அப்போது வடிவம் A என தோன்றும். அதனை முழுமையாக நிரப்ப வேண்டும். ஒவ்வொரு ஒவ்வொன்றையும் கவனமாக படித்து நிரப்பவும். அனைத்தையும் முடித்த பிறகு கேப்ட்சாவை கொடுத்துவிட்டால் விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டது.
வாஷிங்டன் : கடந்த மாதம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவின் பொருளாதாரத்தை உயர்த்தும் பொருட்டு அமெரிக்கா பொருட்களுக்கு மற்ற…
திருநெல்வேலி : நெல்லையில் இளைஞர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த…
சென்னை : தமிழக பட்ஜெட் 2025-2026 முடிந்து அதன் பிறகு பட்ஜெட் மீதான விவாதம், துறை வாரியாக மானிய கோரிக்கைகள்…
மும்பை : மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொண்ட ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, வான்கடே மைதானத்தில் விராட் கோலி ஆல்…
மும்பை : ஐபிஎல் தொடரில் நேற்றைய ஆட்டத்தில் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் 12 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி…
சண்டிகர் : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இன்று (ஏப்.08) மோதுகின்றது.…