நேரு பிறந்த நாளை ஏன் குழந்தைகள் தினமாக கொண்டாடுகிறோம் தெரியுமா?
தேசத்தின் வளர்ச்சிக்கு குழந்தைகள் விதையாக நடப்படுகின்றனர். ஏனென்றால் பிற்காலத்தில் அவர்கள் தான் நாட்டின் தலைவர்களாக உருவெடுக்கின்றனர்.
சென்னை :இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14ஆம் தேதி குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது .இன்றைய குழந்தைகள் நாளைய இந்தியாவை உருவாக்குவார்கள் என்கிறார் ஜவஹர்லால் நேரு.. தேசத்தின் வளர்ச்சிக்கு குழந்தைகள் விதையாக நடப்படுகின்றனர். ஏனென்றால் பிற்காலத்தில் அவர்கள் தான் நாட்டின் தலைவர்களாக உருவெடுக்கின்றனர்.
குழந்தைகள் தினம்;
1856 ஆம் ஆண்டு ஜூன் மாதம் சார்லஸ் லியோனட் என்ற பாதிரியாரால் குழந்தைகள் தினம் தொடங்கப்பட்டது .இந்த நாள் பூக்கள் ஞாயிறு என்று கூறப்பட்டு வந்தது .பின்பு குழந்தைகள் நாள் என கொண்டாடப்படுகிறது. அனைத்து உலக குழந்தைகள் நாள் 1954 இல் இருந்து டிசம்பர் 14 கொண்டாடப்பட்டது. ஐக்கிய நாடுகள் நவம்பர் 20 ல் கொண்டாடுகின்றனர். உலகெங்கிலும் உள்ள குழந்தைகளுக்கு இடையே புரிந்துணர்வையும் ,பொது நிலைப்பாட்டையும் ஏற்படுத்துவதற்கு இந்நாள் ஐநாவால் பிரகடனப்படுத்தப்பட்டது.
பின்பு குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு அவர்களுக்கான பல பொதுநல திட்டங்களை உலகமெங்கும் நடத்துவதற்கு இந்த நாள் தேர்ந்தெடுக்கப்பட்டது. பன்னாட்டு குழந்தைகள் நாள் ஜூன் ஒன்றாம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் குழந்தைகள் தினம் நவம்பர் 14ஆம் தேதி ஒவ்வொரு ஆண்டும் அனைத்து பள்ளிகளிலும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
நேருவின் பிறந்த நாள் குழந்தைகள் தினமாக மாறியது ஏன் ?
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு குழந்தைகள் மீது மிகுந்த அன்பு கொண்டவராக இருந்ததால் குழந்தைகள் அவரை நேரு மாமா என அழைத்தனர். எனவே அவரது நினைவாகவும் அவரது விருப்பத்தின் பெயரிலும் நேருவின் பிறந்த நாளான நவம்பர் 14ஆம் தேதி இந்திய குழந்தைகள் தினமாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் ஒவ்வொரு பள்ளிகளிலும் நேரு குறித்து பேச்சுப்போட்டி ,கவிதை போட்டி, கட்டுரை போட்டி என போட்டிகள் நடத்தப்படுகிறது.மேலும் நேரு கண்ட கனவுகள் குறித்து எடுத்துரைத்தும் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது .