ஹோலி அல்லது அரங்கபஞ்சமி என்று அழைக்கப்படும் பண்டிகை இந்து மதத்தின் பிரபலமான இளவேனிற்காலப் பண்டிகையாகும். இந்தப் பண்டிகை இந்தியா, நேபாளம், வங்கதேசம், போன்ற நாடுகளிலும் இந்து மக்கள் வாழும் நாடுகளிலும் இந்த பண்டிகை கொண்டப்படுகிறது.
இந்த முக்கிய நாளில் மக்கள் ஒருவர் மீது ஒருவர் வண்ணப் பொடிகளையோ அல்லது வண்ணம் கலந்த நீரையோ வீசிக்கொண்டு கொண்டாடுகின்றனர். அந்த நாளுக்கு முன்னதாக பெரிய நெருப்புகளை மூட்டுவார்கள். இது ஹோலிகா தகனம் அல்லது சோட்டி ஹோலி எனவும் அழைக்கப்படும்.
ஹோலிப் பண்டிகை குளிர் காலத்தின் இறுதியில் பங்குனி (பிப்ரவரி ,மார்ச்) மாதத்தின் கடைசி முழு நிலவு நாளில் கொண்டாடப்படுகின்றது.
ஹோலி கொண்டாட காரணம் இதுதான்:
இரண்யகசிபு என்ற அரசன் இருந்தான். இவனுக்கு பிரம்மா தந்த வரத்தால் இவனை யாராலும் கொல்ல முடியவில்லை. அந்த வரம் இவனது பெருந்தவத்தால் கிடைத்தது. இந்த வரத்தை கொண்டு இவனை இரவிலோ, பகலிலோ ,வீட்டிலோ, வெளியிலோ , மண்ணிலோ கொல்ல முடியாது.
இதனால் இவன் எந்த கடவுளைத் தொழாமல் தன்னை வழிபட வேண்டும் என ஆணையிட்டான்.இவனது மகன் பிரகலாதன் திருமாலின் பக்தன். இரண்யகசிபு பல தடவை அச்சுறுத்தியும், பிரகல்லாதன் திருமலை வழிபடுவதை விடவில்லை. பிரகல்லாதனுக்கு நஞ்சூட்டினாலும் அது அவன் வாயில் தேனாகியது. யானைகளால் தக்கியபோதும் காயமில்லாமல் தப்பினான்.
பாம்புகளுக்கு இடையில் பசியோடு பிரகல்லாதனை ஒரு அறையில் தனியாக அடைத்தபோதும் உயிரோடு இருந்தான். தன் மகனைக் கொல்ல இரண்யகசிபு எடுத்த அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன. பின்னர் பிரகல்லாதனை அவனது தங்கை (ஹோலிகா) மடியில் அமரச் செய்து தீயில் இருக்க ஆணையிட்டான்.
அவள் தங்கை(ஹோலிகா) அணிந்துஇருந்த துப்பட்டா( மாயப் போர்வை) . பிரகல்லாதன் திருமாலை வழிபட தீப்பற்றி எரியத் தொடங்கியதும் தங்கையின் சால்வை பறந்து பரகல்லாதனை மூடிக்கொண்டது. இதனால் ஹோலிகா தீயில் இறந்தாள் பிரகல்லாதன் மட்டுமே தப்பித்தான் , இந்த காட்சியைக் கண்டு மக்கள் வியந்தனர். ஓலிகா எரிந்த நிகழ்வே ஹோலியாகக் கொண்டாடப்படுகிறது.
சென்னை : தெலுங்கர்கள் அந்தப்புரத்து சேவகர்கள் என்ற நடிகை கஸ்தூரியின் சர்ச்சைப் பேச்சு தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.…
நாகப்பட்டினம் : நாகை மற்றும் திருமருகல் ஒன்றியத்திற்கு உட்பட்ட பள்ளிகளுக்கு நாளை (நவ.06] உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சிக்கல் சிங்காரவேலர்…
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெறும் அரசு மற்றும் கழக நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இன்று வருகை தந்த போது, துணை…
சென்னை : தெலுங்கு பேசும் மக்கள் குறித்த சர்ச்சை பேச்சுக்கு நடிகை கஸ்தூரி பகிரங்க மன்னிப்புக் கோரியுள்ளார். தெலுங்கர்கள் அந்தப்புரத்து…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இம்மாதம் 25-ஆம் தேதி தொடங்கும் என்று நாடாளுமன்ற விவாகாரங்கள் துறை அமைச்சர் கிரண்…
அமெரிக்கா : உலகமே உற்று நோக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குப்பதிவு இந்திய நேரப்படி சரியாக மாலை…